தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தைப் பெறுவது எது என்றால் ஆலமரம் என்று சொல்வார்கள்.
ஆலமரத்தின் நிழலிலே அமர்ந்துதான் ஞான குருவான தட்சிணாமூர்த்தி நமக்கு ஞானம் தருகிறார் என்றும்,
பொன், பொருள் குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பித்ரு தர்ப்பணத்திற்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்திற்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
எனவேதான் ஞானமும் கர்மத்திற்கும் உரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில குட்டிக் கண்ணன் படுத்துக்கொண்டார் என்பார்கள்.
மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி இருக்கிறது என்கிறார்கள்.
ஆலிலை வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை. சரு கானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும்.
இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க காரணம் என்பார்கள்.
ஓரளவு காய்ந்த ஆலி லையின் மேல் தண்ணீர் தெளித்தால் அது இழந்த பச்சையை பெரும் சக்தி வாய்ந்தது.
தான் வாடாத வதங்காத ஆத்மா என்பதை ஆலிலை மூலமாக கண்ணன் நிரூபிக்கிறார் என்றும் சொல்வார்கள்.
ஆலி லையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறார் “பக்தனே நீ எதற்கும் கவலைப்படாதே, என்னைப்போலவே நீ குழந்தை உள்ளத்தோடு இருந்தால் உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலை யால் தாக்கப்பட மாட்டாய், குடும்பம் என்ற சம்சார கடலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னை போல் ஆனந்தமாய் இருஎன்று…”
இத்தனை காரணங்களால் கண்ணன் ஆலிலையில் படுத்திருக்கிறார்.
Article By – செல்வராஜ் கோவை.