
வித்தியாசமான நிகழ்ச்சிகளை விதவிதமாக நடத்தும் நம் சூரியன் பண்பலை, ரேடியோவில் மட்டுமில்லாமல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரிதம் என்கிற பெயரில் இசைநிகழ்ச்சியை நடத்திவருகிறது.
இதுவரை S.P.B, ராஜேஷ் வைத்யா, D . இமான், சித் ஸ்ரீராம், தாய்குடம் பிரிட்ஜ் மற்றும் பல இசைக்கலைஞர்களுடன் பல்வேறு நிகழ்ச்சிகளை, பல்வேறு இடங்களில் நடத்தி சாதனைப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (26.01.2020) குடியரசு தினம் அன்று மாலை 6 மணிமுதல், சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஸ்ரீ முத்த வேங்கடசுபா ராவ் கான்செர்ட் ஹாலில் ரிதம் இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளது.
Rhythm 2020
இந்த ரிதம் இசைநிகழ்ச்சியில் பியானோ இசைக்கருவியை வேகமாக வாசித்து உலக அரங்கையே அதிர வைத்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் மற்றும் IndoSoul Band-ன் வயலின் இசையில் நம்மை உருகவைக்கும் கார்த்திக் ஐயர் இவர்களின் இசைநிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த இசைநிகழ்ச்சிக்கான டிக்கெட்டை பெற 044 40675679 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.