இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள RRR திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்படியெல்லாம் நடைபெற்றது என்பதை ஒரு முன்னோட்ட வீடியோவாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவிற்கு Roar Of RRR என பெயரிட்டுள்ளனர்.
பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரு பிரம்மாண்ட படைப்புகளுக்கு பின் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கும் திரைப்படம் RRR. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் 1920களில் நாட்டிற்காக போராடிய வீரர்களை பற்றிய கதை அம்சத்தை கொண்டுள்ளது. இப்படத்தில் ஜூனியர் எ.ன்டி.ஆர், கோமரம் பீம் கதாபாத்திரத்திலும் ராம்சரண், அல்லுரி சீதாராம ராஜு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மாபெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 13ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
பாகுபலியின் கதையை எழுதிய கே.வி. விஜயேந்திர பிரசாத் அவர்களே RRR திரைப்படத்திற்கும் கதை எழுதியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
இன்று வெளியிடப்பட்ட Roar Of RRR வீடியோவை வைத்து பார்க்கும்போது இப்படத்தில் பல பிரம்மாண்ட காட்சிகளும், வியப்பூட்டும் VFX காட்சிகளும் இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது. இப்படத்திற்கு பாகுபலியின் இசையமைப்பாளரான எம்.எம் கீரவாணி அவர்களே இசை அமைத்துள்ளார்.
- தளபதி விஜய்யின் 10 சிறந்த சினிமா ஜோடிகள் யார் யார் தெரியுமா?
- Rashmika Mandanna in Kubera – Trending Look & Viral Photos Inside
- Krithi Shetty debut in Tamil cinema with her adorable beauty her photos collections here
- Anaswara Rajan Stuns in Latest Viral Photos – Mallu Actress Shines Bright Online
- ஜெய் பீம் முதல் மனிதன்: நீதிமன்றம் சார்ந்த 5 பெஸ்ட் தமிழ் படங்கள் லிஸ்ட்
இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், இப்படத்தை குறித்த சின்ன சின்ன Update- கள் கூட சமூக வலைதளங்களில் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.
RRR திரைப்படம் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். Roar Of RRR வீடியோவை கீழே காணுங்கள்.