Cinema News Specials Stories

சினிமா ரசிகர்களை தன் பக்கம் சாய வைத்த சாய் பல்லவி!

Sai-Pallavi

கன்னத்துல Pimple இருந்தா அழகு போயிடும்னு நினைக்குற பலர் இங்க இருக்கும் போது அந்த Pimple-அ தன்னோட அழகா மாத்தின நடிகை தான் சாய் பல்லவி. இன்னைக்கு பல பெண்களுக்கு மீடியால நம்மாலயும் சாதிக்க முடியும்னு பல விதத்துல நம்பிக்கை தந்த நடிகை சாய் பல்லவி.

ஆரம்ப காலத்துல ஜெயம் ரவியோட தாம் தூம் படத்துல சின்ன கதாபாத்திரம் பண்ணியிருப்பாங்க சாய் பல்லவி. ஏன் தனியார் தொலைக்காட்சி நடன போட்டிகள்ல கூட சிலர் சாய் பல்லவிய பாத்திருப்போம். ஆனா அப்போ நமக்கு தெரியாது, இப்ப தென்னிந்திய சினிமால சாய் பல்லவி முக்கியமான நடிகையா மாறுவாங்கனு.

நம்ம ஊரு கோத்தகிரில பொறந்த நல்லா தமிழ் பேசக்கூடிய சாய் பல்லவி, நல்ல நடிகைனு நம்ம அண்டை மாநிலமான கேரளால 2015-ல ரீலிஸ் ஆன பிரேமம் படம் மூலமா தான் நமக்கே தெரியும். பல இளைஞர்களோட சொந்த கதைய போல பிரேமம் கதை இருந்ததால மலையாள சினிமாவ தாண்டி தமிழ் சினிமாலயும் அந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்துச்சு.

பிரேமம் படம் ஒரு கவிதை மாதிரி இருக்குனா அதுக்கு மிகப்பெரிய அழகு சேர்த்தது சாய் பல்லவி தான். இன்னைக்கு வரைக்கும் பலர் சாய் பல்லவிய மலர் டீச்சர்னுதான் கூப்பிடுறாங்க, ஏன்னா அந்த கதாபாத்திரத்துக்கு அந்தளவு உயிர் கொடுத்திருப்பாங்க சாய் பல்லவி. எனக்கு மலர் டீச்சர் மாதிரி ஒரு டீச்சர் இல்லையேனு பலருக்கும் மனசுல கவலை இருக்கு.

பிரேமம் தொடர்ந்து 2016-ல ரிலீஸ் ஆன ‘களி’ இன்னும் மிகப்பெரிய வாய்ப்புகளை சாய் பல்லவிக்கு தந்துச்சு. அப்படி வந்தது தான் Fidaa, மிடில்கிளாஸ் அப்பாயி போன்ற தெலுங்கு படங்கள். அந்த படங்கள் சாய் பல்லவியோட நடிப்பு, நடனத்துக்காகவே ஹிட்டாச்சுனு கூட சொல்லலாம்.

மலையாளம், தெலுங்கு ரசிகர்கள தன் பக்கம் சாய வச்ச சாய் பல்லவி ‘தியா’ படம் மூலமா தமிழ் சினிமால அறிமுகம் ஆகுறாங்க. பிரேமம் படம் மூலமாவே தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமான சாய் பல்லவிக்கு அடுத்தடுத்து மாரி 2, NGK போன்ற பெரிய ஹீரோக்களோட படத்துல வாய்ப்பு கிடைச்சுது.

பாக்க ரொம்ப அமைதியா, அழகா, பாத்தா நம்ம மலர் டீச்சரா இதுனு ரசிகர்கள ஆச்சரிய பட வைக்குற மாதிரி மாரி 2 படத்துல அராத்து ஆனந்தி கதாபாத்திரத்துல செம்ம சேட்டை பண்ணியிருப்பாங்க . பிரபுதேவா மாஸ்டர் மாதிரி நல்ல Dancer ஆகனும்னு கனவோட இருந்த சாய் பல்லவிக்கு மாரி 2 படத்துல அவரோட Choreographyல Dance ஆட வாய்ப்பு தந்த பாட்டு தான் “ROWDY BABY”.

Youtube-ல தென்னிந்திய சினிமால அதிக views போன ஒரு வீடியோ சாங் ரவுடி பேபி. அதுக்கு மிக முக்கிய காரணம் சாய் பல்லவியோட Dance.

NGK படத்துல இதுவரை பார்க்காத, யாரும் எதிர்பாராத மாதிரி வித்தியாசமான நடிப்ப தந்திருப்பாங்க சாய் பல்லவி. 2020-ல வெற்றிமாறன் இயக்கத்துல வந்த பாவக் கதைகள் Anthology-ல சாய் பல்லவி பல பெண்களோட வலிகள அப்படியே தன் நடிப்பால காட்டிருப்பாங்க.

இப்படி எந்த ஒரு கதாபாத்திரம்னாலும் அதுக்காக தன்னை அப்படியே அர்ப்பணிக்குற சாய் பல்லவிக்கு சமீபத்துல ரீலிஸ் ஆன ஷ்யாம் சிங்கராய் PAN INDIA படமா அமைஞ்சுது. அதுல அவங்க பண்ணின ரோஸி கதாபாத்திரம் நல்ல பெயரையும் சில விமர்சனங்களையும் தந்துச்சு.

Image

நல்ல புகழ் வரும்போது அதை யோசிக்காம அடுத்தடுத்து உழைச்சிட்டு இருக்க சாய் பல்லவி தேவையற்ற விமர்சனங்கள் வரும்போது தேவையில்லாததுக்கு நேரத்த வீணடிக்காம அவங்களோட வெற்றிப் பாதைய நோக்கி ஓடிட்டு தான் இருக்காங்க.

தன்னோட இயல்பான நடிப்பால, அழகான தமிழால, வசீகரமான சிரிப்பால, ரசிகர்களை தன் பக்கம் சாய வச்ச சாய் பல்லவி மேல தோல்விகள் சாயாம வெற்றிகளாய் சேர சூரியன் FM-ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Article By RJ Srini

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.