Cinema News Stories Trending

சரவெடி ‘ சலார் ‘ Update இதோ !

பாகுபலியாய் நம் மனதில் பாய் போட்டு தங்கிவிட்ட பிரபாஸின் “சலார்” திரைப்படத்தின் First Look போஸ்டர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இப்படமும் பாகுபலியை போல பன்மொழித் திரைப்படமாக உருவாகும் என தெரிகிறது.

ஏற்கனவே பிரபாஸ் ராதே ஷ்யாம், #Prabhas21, ஆதி புருஷ் ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சலார் திரைப்படத்தின் Update ‘டார்லிங்’ பிரபாஸ் ரசிகர்களுக்கு தித்திப்பில் திணறடிக்கும் Add-on Update ஆக அமைந்துள்ளது என்றே கூறலாம்.

” யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே ” என்று கூறுவது போல, KGF திரைப்படத்தை தயாரித்த Homable Films நிறுவனம் தங்களது அடுத்த இந்திய படத்தை அறிவிக்கப் போவதாக நேற்றே (டிசம்பர் 1) அறிவித்தனர். அது பிரபாஸின் திரைப்படமாக இருக்குமோ???.., என்று ரசிகர்கள் சந்தேகப்பட்ட நிலையில், சலார் திரைப்படத்தின் போஸ்டர்-ஐ இன்று வெளியிட்டு பிரபாஸ் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளனர்.

வெறித்தனமான வெற்றிப் படமான K.G.F திரைப்படத்தை இயக்கிய பிரஷாந்த் நீல் தான் சலார் திரைப்படத்தையும் இயக்கவுள்ளார். இப்படத்தின் போஸ்டர்-ஐ வைத்து பார்க்கும்போது, இப்படம் ஒரு மாஸ் Action திரைப்படமாக அமையும் என தெரிகிறது. சலாரின் படப்பிடிப்பு 2021 ஜனவரியிலிருந்து தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தின் போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் இருந்து # SALAAR என்ற டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதுவே இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை குறிக்கிறது. அதுமட்டுமின்றி பிரபலங்கள் பலரும் இப்படத்தின் போஸ்டர்-ஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விரைவில் சலாரின் சாகசங்களை திரையில் திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சலார் திரைப்படம் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

About the author

alex lew