Cinema News Stories

Saroja Devi Passed away: பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்..!

Saroja Devi Passed away
Saroja Devi Passed away

Saroja Devi Passed away: நடிகை சரோஜாதேவி காலமானார்! பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 87

கர்நாடகத்தைச் சேர்ந்த சரோஜாதேவி, ஐம்பதாண்டு காலமாக திரைப்படத் துறையில் உள்ளார். 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். திரைப்படத்துறையினரால் கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரசுவதி போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார். பல திரைப்பட விருதுகளையும், இந்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் வென்றுள்ளார்.

தமிழ் திரையுலகில் உலகில் 60 முதல் 70 வரையான காலகட்டங்களில் 17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்த சரோஜாதேவி அவர்கள். மக்கள் திலகம் எம். ஜி. ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன் ஆகிய 3 பேருடனும் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர்.
ஒரு காலத்தில் ‘சூப்பர் ஸ்டார்’களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர் நடிகை சரோஜாதேவி.

இவர் எம்.ஜி.ஆர் உடன் 26 படங்களிலும் சிவாஜி கணேசன் உடன் 22 படங்களிலும் நடித்துள்ளார்.
பின்பு ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், முத்துராமன், ஏ. வி. எம். ராஜன், ரவிச்சந்திரன், ஆகிய பிரபல நடிகர்கள் உடன் நடித்துள்ளார்.
1960–1970 காலகட்டத்தில் பத்மினி, சாவித்திரி, சரோஜா தேவி என்ற முப்பெரும் முன்னணி கதாநாயகிகளாக கருதப்பட்டவர்கள்
1965 பிறகு தமிழ் திரையுலகில் கே. ஆர். விஜயா, ஜெயலலிதா வருகைக்கு பின் நாட்களில் திரைப்படங்களில் வாய்ப்பு குறைந்தது.

சரோஜா தேவி அவர்கள் தனது 100வது திரைப்படம் பெண் என்றால் பெண் என்ற தமிழ்த் திரைப்படமாக அமைந்தது. எனது பிறவி பயன் என்று தமிழ் மொழியையும், தமிழ் திரையுல ரசிகர்களும் எனக்கு அளித்த பெரும் வரம் என்று நேசித்தார்.

About the author

Sakthi Harinath