Happy Birthday Shreya Ghoshal – ஸ்ரேயா கோஷல் இந்தியாவின் முன்னணி பாடகிகளில் ஒருவர். 16 வயதில் பாடலாசிரியராக தன் பயணத்தை தொடங்கிய இவர், பல மொழிகளில் பாடி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். தேசிய விருதுகள், ஃபிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல பரிசுகளை வென்ற அவர், இசை உலகில் தனக்கென ஒரு பிரத்தியேகமான இடத்தை பெற்றுள்ளார்.
Shreya Ghoshal
ஸ்ரேயா கோஷல் இந்த பெயருக்கு இந்தியா மட்டுமில்ல உலகளவுல உயிரே கொடுக்கற அளவுக்கு ரசிகர்கள் இருக்காங்க. அப்படி என்ன பண்ணுச்சு இவங்க குரல்..? எதனால இவ்வளவு ரசிகர்கள்..? பதில் உங்ககிட்டையே இருக்கும். எங்கேயும் தேடாதீங்க உங்க மொபைல்ல தான்….!
முன்னாடிலாம் தமிழ்நாட்டுல தமிழ் பாடல்கள் போல அதை தாண்டி அதிகம் பலரும் கேட்டது ஹிந்தி பாடல்களா இருக்கும். ஆனா இப்பலாம் இந்திய மொழிகள்ல எங்கேயோ ஹிட் ஆகுற பாடல்கள இங்க கொண்டாடுறோம். வெளிநாட்டு பாடல்களை நம் ஊரு மக்கள் இவ்வளோ ன ரசிகர்கள் கேக்குறாங்களானு ஆச்சரியப்படுற அளவு ஒரு வெளிநாட்டு பாடகர் சென்னைலையோ, மும்பைலையோ காண்சர்ட் பண்ணும்போது வர கூட்டத்த பார்த்தா பிரம்மிப்பாயிருக்கு.ஏன்னா இசைக்கு மொழி தேவையில்லை…. !!!

அப்படி தான் தன்னோட நாலு வயசுல இசையால் ஈர்க்கப்பட்ட ஒரு பொண்ணு சங்கீதத்த கத்துக்கிட்டு , பல இசை நிகழ்ச்சி போட்டிகள்ல கலந்துகிட்டு, அங்க கிடைச்ச வெற்றி இவருக்கு தந்த பரிசு தான் 2002ல ஹிந்தில வெளிவந்த தேவ்தாஸ் படத்துல இரண்டு பாடல் பாடுற வாய்ப்பு .Bairi Piya, Dole Ra Dola இந்த ரெண்டு பாட்டும் செம்ம ஹிட்டாகி தன்னோட முதல் படத்துல முதல் பாட்டுக்கே தேசிய விருது கிடைக்குது ஸ்ரேயா கோஷலுக்கு.
அன்னைக்கு அந்த விருது தந்த ஊக்குமும் மக்கள் தந்த வரவேற்பும் ஸ்ரேயா கோஷலுக்கு இசைத்துறைல சிவப்பு கம்பளம் தந்து வரவேற்றுச்சு. தமிழ், தெலுங்கு மலையாளம் ஹிந்தி, கன்னடம், மராத்தி , குஜராத்தி, நேபாளி, பெங்காலி, அசாமி, போஜ்புரி, ஒரியா, துளூ, பஞ்சாபினு பல மொழிகள்ல 3000ற்க்கும் அதிகமான பாடல்கள் பாடியிருங்காங்க.

தமிழ் சினிமால மட்டும் 200க்கும் அதிகமான பாடல்கள் ஸ்ரேயா கோஷல் பாடியிருங்காங்க, இப்பவும் தமிழ்வரிகளை இந்தில எழுதி அதை தான் பாடுவாங்க ஸ்ரேயா கோஷல். ஸ்ரேயாவ தமிழ் சினிமால அறிமுகப்படுத்தினது இசையமைப்பாளர் கஸ்தூரி ராஜா. 2002வது வருஷம் ஆல்பம் படத்துல வந்த செல்லமே செல்லம் நீதானடா பாட்டால தான் தமிழ் மக்களுக்கு ஸ்ரேயா கோஷல் குரல் அறிமுகமாச்சு. அடுத்து இசைஞானி இளையராஜா, இசை புயல் ஏ ஆர் ரஹ்மான், தேவா ஹாரிஸ், யுவன், இமான், வித்தியாசாகர், விஜய் ஆண்டனி , ஜி வி பிரகாஷ், தமன்,.. இப்படி இன்னும் பல இசையமைப்பாளர்கள் இசை பாடியிருங்காங்க ஸ்ரேயா கோஷல்.

இதுவரை 5 தேசிய விருது, 6 பிலிம்பேர் விருது, 2 தமிழ்நாடு மாநில அரசு விருது, கேரள மாநில விருதுனு பல விருதுகள் இந்த வசீகரக்குரல தேடி வந்துச்சு.. இவ்வளவு ஏன் சினிமால நடிகையாகும் வாய்ப்பு வந்தும் இசை மேல இருக்க காதல் நடிகையாக வந்த வாய்ப்புக்கு நோ செல்ல வச்சுச்சு.
ஸ்ரேயா கோஷலுக்கு யாருக்கும் கிடைக்காது சில பெருமைகள் இருக்கு. அமெரிக்கால இருக்க ஓஹியோல கௌரவிக்கப்பட்டார் , அங்க இருந்த ஆளுநர் டெட் ஸ்ட்ரிக்லேண்ட் 26 ஜூன் 2010ல “ஸ்ரேயா கோஷல் தினம்“னு அறிவிச்சாரு… ஏப்ரல் 2013ல இங்கிலாந்தோட ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் லண்டனில் மிக உயர்ந்த கௌரவத்தை இவருக்கு கொடுத்தாங்க. ஜூலை 2015ல, சின்சினாட்டி மேயர் ஜான் கிரான்லி , ஜூலை 2015ல சின்சினாட்டியில் “ஸ்ரேயா கோஷல் பொழுதுபோக்கு மற்றும் உத்வேக தினம்“னு அறிவிச்சு கௌரவிச்சாங்க இந்தியாவோட முதல் 100 பிரபலங்கள்னு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியல்ல ஸ்ரேயா கோஷலோட பெயர் 5 முறை வந்திருக்கு . 2017வது , டெல்லில இருக்கு மேடம் துசாட்ஸ் மியூசியம்ல ஸ்ரேயா கோஷலுக்கு மெழுகுச் சிலையை வைச்சாங்க, முதல் முறையா ஒரு இந்திய பாடகிக்கு மெழுகு சிலை வச்சது ஸ்ரேயாக்கு தான்.
இப்படி தன்னோட வசீகர குரலால முன்பேவா , உன்னவிட உறவுனு சொல்லிக்கிட யாருமில்ல,மன்னிப்பாயா, உருகுதே மருகுதே, பருத்திவீரன் ஐயையோ, நீதானே நீதானே, சொல்லிடேனே இவன் காதல, கண்டாங்கி கண்டாங்கினு பல பல ஹிட் பாடல்கள் பாடிய ஸ்ரேயா கோஷல் இன்னும் பல்லாயிரம் பாடல்கள் பாடி இசை ரசிகர்களை மகிழ்விக்க சூரியன் FMன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.