நமக்கெல்லாம் தெரிந்த சித் ஸ்ரீராம்-ன் உண்மையான பெயர் சித்தார்த் ஸ்ரீராம். மே 19ஆம் தேதி 1990 இல், இவர் பிறந்துள்ளார். சித் ஸ்ரீராம் சென்னையில் தமிழ் பேசும் ஒரு குடும்பத்தில் பிறந்தவர் தான். ஆனால் இவர் ஒரு இந்திய-அமெரிக்கன் பின்னணி பாடகராக திகழ்கிறார்.
இவருடைய பயணம் தமிழ் சினிமாவில் 2013-ல் ஆரம்பித்தது. அடுத்தடுத்து ஏ.ஆர்.ரகுமான், அனிருத் ரவிச்சந்தர், லியோன் ஜேம்ஸ், சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், இமான் மற்றும் யுவன் சங்கர் ராஜா போன்ற பெரிய பெரிய இசையமைப்பாளர்களின் இசையில் இவர் பாடி இருக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையின் மூலமாக முதல் முதலில் தமிழ் சினிமாவுக்குள் வந்த இவர் தள்ளிப்போகாதே, தாரமே தாரமே, மறுவார்த்தை பேசாதே போன்ற சூப்பர் ஹிட்டான பாடல்கள் எல்லாம் பாடி இருக்கிறார்.

இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே பாட்டு தெலுங்கு மக்கள் மத்தியில் மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள அனைவருமே அதிகம் முனுமுனுத்த பாடலாக மாறியது. இவர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் கடல் படத்தில் பாடிய “அடியே” பாடல் வேற லெவல் ஹிட்.
தன்னுடைய சகோதரி பரதக் கலைஞர் , தான் ஒரு பாடகர் , அதனால் சகோதரி ஆடுவதற்கு ஏற்றவாறு பாடி காணொளிகளை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்வார். இந்த ஆடலையும் பாடலையும் ரசிக்காத ரசிகர்களே கிடையாது. மணிரத்னம் தயாரித்து வெளிவந்த “வானம் கொட்டட்டும்” படத்தில் இசையமைப்பாளராக தடம் பதித்தார் சித் ஸ்ரீராம்.
சித் ஸ்ரீராம் கத்தினாலும், கதறினாலும் அதுவும் ஒரு வகையான சங்கீதமாக பார்க்கப்படுகிறது. தமிழில் மட்டும் இல்லாமல் கன்னடம், மலையாளம், மொழிகளிலும் இவர் பாடியிருக்கார். “டியர் காம்ரேட்” படத்தில் மூன்று மொழிகளிலும் இவர் பாடியிருப்பார்
.
இவர் பாடிய பாடல்கள் சூப்பர்ஹிட் என்று தான் சொல்லணும், இவர் முனுமுனுத்தால் கூட அதை கேட்க அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இசையில் அ முதல் ஃ வரை அனைத்தையுமே இவர் கை விரலில் வைத்திருக்கிறார். இப்படி தமிழ் சினிமாவை கலக்கி கொண்டு இருக்கும் சித் ஸ்ரீராம்-க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
Article by RJ Suba