Specials Stories

Sir, PAPER

Sir, PAPER
Sir, PAPER

இன்றைய நாட்கள்ல.. காலைல எழுந்ததுமே… எல்லாரும் Bed Coffee குடிக்கிறோமோ இல்லையோ ஆனா கண்டிப்பா நம்ப பக்கத்துல இருக்குற Mobile Phone-அ தான் எடுத்து பாப்போம்..

Generations, Technology build ஆக ஆக.. Phones-மே Button Phone-ல இருந்து Touch Phone-கு மாறிடுச்சு.. இப்படி எல்லாமே மாறி வளர்றதுனால.. நம்ப முன்னாடி காலங்கள்ள நடைமுறையில வச்சிருந்த பழக்க வழக்கங்கள்ல ஒரு முக்கியமான பழக்கத்த நம்ம எல்லாருமே மறந்து வந்துட்டு இருக்கோம்..

TOUCH PHONE-கு முன் செய்தித்தாள்..

இந்த Generations-ல நம்ம காலையில எழுந்து News தெரிஞ்சுக்கணும்னா அதிகபட்சமா ஒன்னு TV இல்லனா Touch Phone தான் எடுப்போம்.. ஆனா முன்னாடி காலங்கள்ல நம்மளோட தாத்தா பாட்டிகள் அப்பா அம்மாக்கள் எல்லாருக்குமே Coffee Cup பக்கத்துல Newspaper இருந்தா தான் அவங்களோட நாளே தொடங்கும்

அன்றாட செயல்கள்ல எப்படி காலைல எழுந்து காபி குடிக்கிறது, சாமி பாட்டு கேக்குறது எல்லாம் ஒரு பழக்கமா வெச்சிருந்தாங்களோ அதே மாதிரி நமக்கு முன்னாடி Generations-ல நியூஸ் பேப்பர் படிக்கிறதும் ஒரு அன்றாட பழக்கமா வச்சிருந்தாங்க..

ஏன் அந்த time-ல நியூஸ் பேப்பரை எடுத்து வீடு வீடா கொண்டு போய் கொடுக்கிறதே நிறைய பேருக்கு ஒரு உதவியான Part Time Work இருந்துச்சு..

அச்சிடப்பட்டதிலிருந்து டிஜிட்டல் வரை..

இன்னைக்கு நிறைய நியூஸ் பேப்பர் கம்பெனிஸ் Technology development-னால
Printed Edition-ல இருந்து Digital Edition-கூ கொண்டு வந்துட்டாங்க..
ஆனா என்னதான் டெக்னாலஜி வளந்தாலும் ஆன்லைன் எடிஷன் கொண்டு வந்தாலுமே ஒரு நியூஸ் பேப்பரை கையில பிடிச்சு அதை படிக்கிற சுகமே தனி தான..

2025 ஓட survey படி இப்போ இருக்குற Digital Impact-நால Human-ஓட attention span
12 second-லிருந்து 8 second-கு வந்துருக்கு, இதனால நிறைய டிஜிட்டல் பிளாட்பார்ம்ஸ் News-அ ரொம்ப short-அ சோசியல் மீடியால One line போஸ்ட் பண்றாங்க..

என்னதா Digital media, social media எல்லாம் fast-அ வளர்ந்தாலும், newspaper-க்கு தனி value இருக்கு..
Social media-ல Fact News மட்டுமில்லாம rumours, fake news-உ வேகமா பரவுது..
ஆனா newspaper-ல fact-check,editorial review,journalistic ethics follow பண்ணி தான் News-அ publish பண்றாங்க. அதனால தான் newspapers-கள் அதோட credibility-யை இன்னும் maintain பண்ணிக்கிட்டு இருக்கு..

ஜனவரி 29 “INDIAN NEWSPAPER DAY”

1970 la James Augustus Hicky-னால Publish பண்ணபட்ட Hicky’s Bengal Gazette Newspaper வெளியான நாளை நினைவு கூற தான் ஒவ்வொரு வருஷம் ஜனவரி 29ஆம் தேதி அன்னைக்கி “இந்திய செய்தித்தாள் தினம்’’ கொண்டாடப்படுது..

Newspaper-கிறது வெறும் Print Media கிடையாது அது மக்களுக்கும் அரசுக்கும் ஒரு தகவல் அறிவிப்பு உதவி நண்பனா இருக்கு.. Politics, economy, education, sports, cinema, science-னு எல்லா துறைகளையும் connect பண்ணுற ஒரு bridge தான் Newspaper.. அதுமட்டுமில்ல Public Awareness, Social Responsibility, democracy-யோட Backbone-உ செயல்படுது..

A Salute for Journalists, Reporter’s, Editor’s:

நியூஸ் பேப்பர்ல வர செய்திகளை அலசி ஆராய்ந்து ஏன் Natural disasters, elections, border issues, corruption investigations மாதிரி sensitive areas-ல கூட Ground Level-ல Work பண்ணி உண்மை தகவலை எடுத்து மக்களுக்கு நியூஸ் பேப்பர் மூலமா கொண்டு வந்து தர Journalists, Reporter’s, Editor’s ஓட உழைப்பையும் ஈடுபாட்டையும் Salute பண்ற ஒரு நாளா கூட இந்த நாளை சொல்லலாம்..

Indian Newspaper Day நமக்கு நினைவூட்டுவது ஒரே ஒரு விஷயம் தான் இந்திய பத்திரிக்கையோட வரலாறு, அதோட முக்கியத்துவம் மற்றும் எதிர்காலம்.

என்னதான் Technology, Digital Growth இருந்தாலும் ஒரு செய்தியை நியூஸ் பேப்பர்ல படிக்கிற அனுபவமே தனி தான்.. Quality journalism-ஐ support பண்ணுவது நம்ம ஒவ்வொருத்தரோட கடமை..இனிமே வரக்கூடிய காலங்கள்ல வரக்கூடிய சந்ததிகள் எல்லாருமே நியூஸ் பேப்பர் என்கிற பொக்கிஷத்தை அழிய விடாம பாத்துக்கணும்.

Script by – RJ Durga