Sivakarthikeyan: 13 ஆண்டில் தமிழ் சினிமா பராசக்தியாக மாறிய சிவகார்த்திகேயன் – தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயனின் 13 வருட திரைப்பயணம் பற்றிய தகவல்கள் இங்கு விரிவாக உள்ளது.
சிவகார்த்திகேயன்
சினிமாவுக்கு ஏற்ற ஆஜானு பகவான தோற்றம் இல்லை .அந்த அளவுக்கு சினிமா தொடர்பு கொண்ட பின்புலம் மிக்க குடும்பம் இல்லை. பக்கத்து வீட்டு பையனைப் போல வெகு இயல்பாக நமது நெருக்கமான நண்பனைப் போல எளிதாக பழகக்கூடிய அனைவருக்கும் பிடித்துப் போகின்ற வகையில் அமைந்த முகத்துடன் அந்த இளைஞன் தொலைக்காட்சிகளில் தோன்றிய போது அவனுக்காகவே அந்த நிகழ்ச்சி பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு அவருடைய கலகலப்பான பேச்சு எதார்த்தமான சிரிப்புகளும் கேலியும் கிண்டலும் மிக்க அந்த நகைச்சுவை நிகழ்ச்சி அனைத்து தொலைக்காட்சிகளிலும் வந்த நிகழ்ச்சிகளை விட உச்சத்தில் இருந்தது .
அதற்கு அடிப்படை காரணமாக இருந்த அந்த இளைஞன் பிறந்தது 1985இல் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கின்ற சிங்கம் புணரி என்ற இடத்தில். அப்பா தாஸ் ஒரு ஜெயில் சூப்பரண்டண்ட்டாக இருந்தார் .அம்மா ஹோம் மேக்கர் ஒரே ஒரு சகோதரி. இந்த குடும்பத்தில் இருந்து வந்த அந்த இளைஞன் படித்தது திருச்சியில் இருக்கின்ற கேம்பாயின் ஆங்கிலோ இந்தியன் ஹையர் செகண்டரி ஸ்கூல் தனது கல்லூரி படிப்பை ஜேஜே காலேஜ் ஆப் இன்ஜினியரிங்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டம் முடித்த பிறகு சென்னையில் எம்பிஏ படித்தார் படிக்கின்ற காலத்திலேயே மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆகவும் ஸ்டாண்ட் அப் காமெடியன் ஆகவும் பல மேடைகளில் தோன்றி பலரது கவனத்தை ஈர்த்தார்.

சின்னத்திரை
இந்த நேரத்தில் தான் அவருடைய நண்பர்களினுடைய வழிகாட்டுதலின்படி ஸ்டார் விஜய் டிவி நடத்திய கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றார் பரிசை வென்றதோடு தனது பணி முடிந்து விட்டது என்று நினைக்காமல் தன்னுடைய கனவுகளையும் லட்சியங்களையும் நிறைவேற்றுவதற்காக ஸ்டார் விஜய் டிவி அடித்தளமாகக் கொண்டார் அங்கு தான் “அது இது எது” என்ற புகழ்பெற்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து பலரது கவனத்தையும் கவர்ந்தார்.
முதல் நடிப்பு
இந்த சமயத்தில் தான் தன்னுடைய நண்பனான பின்னாலில் புகழ்பெற்ற இயக்குனராக விளங்குகின்ற அட்லி உடன் இணைந்து “முகப்புத்தகம்” என்ற ஷார்ட் பிலிம் நடித்தார் குரள்786, 360 டிகிரி போன்ற பல குறும்படங்களில் நடித்த அந்த இளைஞன் பின்னாளில் தமிழ் சினிமாவின் அதிவேகமாக வளர்ந்து வரும் இளம் நாயகனாக வருவான் என்று யாரும் அப்போது எதிர்பார்க்கவில்லை ஆம் ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மிமிக்கிரி ஆர்டிஸ்ட் ஆக தனது வாழ்க்கையை தொடங்கிய அந்த இளைஞனின் பெயர் சிவகார்த்திகேயன். இன்று அதிக ரசிகர்கள் குறிப்பாக இளம் ரசிகைகள் விரும்புகின்ற கதாநாயகனாக வலம் வருகின்ற சிவக்கார்த்திகை என்னுடைய ஆரம்ப காலம் அவ்வளவு எளிதானதாக அமைந்து விடவில்லை, அஜித் நடித்த ஏகன் படத்தில் ஒரு சிறு காட்சியில் அவர் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு படத்திலும் நடித்த ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அவர் நடித்த காட்சி அழிக்கப்பட்டது.

வெள்ளித்திரை
இப்படி ஆரம்பமே முரண்பாடாக இருந்தாலும் கூட மனம் தளராத சிவகார்த்திகேயன் தொடர்ந்து திரை துறையில் தனது முயற்சி மேற்கொண்டு இருந்தார் அந்த நேரத்தில் தான் பசங்க படத்தின் புகழ் இயக்குனர் பாண்டியராஜன் தனது அடுத்த படமான மெரினா என்ற படத்திற்கு அவரை நடிக்க அழைத்தார் அதற்காக பல நாட்கள் மெரினா கடற்கரையில் சுற்றித் திரிந்து பல அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுக் கொண்டார் சிவகார்த்திகேயன்.
இந்த சமயத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கணவர் தனுஷ் உடன் இணைந்து நடிக்க சிவகார்த்திகேயனின் ஒப்பந்தம் செய்து 3 படத்தில் அவரை நடிக்க வைத்தார் இப்படி சிறு சிறு வேடங்களிலும் துணை கதாபாத்திரங்களாகவும் நடித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை முழுநேர அந்த முழு படத்தினுடைய கதாநாயகனாக மாற்றிய பெருமை சாறும் 2012 ஆம் ஆண்டு அவர் எடுத்த மனம் கொத்திப் பறவை என்ற திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த படமாக இருந்தது அதில் மிகவும் பொருத்தமான நடிகராக சிவகார்த்திகேயன் இறந்தார் அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பையும் தமிழ் சினிமா கொடுத்தது.

முக்கிய நடிகர்
அடுத்த ஆண்டு 2013 ஆம் ஆண்டு எதிர்நீச்சல் படம் வந்தது அதே போன்று கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற அந்த திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனுடைய நடிப்பு பேசப்பட்டது ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல 2013இல் ஒரு ஜாக்பாட் பரிசு சிவகார்த்திகேயன் கடித்தது என்றால் அது அந்த ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படம் அந்த திரைப்படம் தான் சிவகார்த்திகேயனை ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியது வெறும் நூறு நாளில் படமாக்கப்பட்ட வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் பல திரையரங்குகளில் ஒரு நாட்களையும் தாண்டி ஓடியது வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.
மக்கள் மத்தியில் நல்ல பெயரையும் திரை உலகில் மிகப்பெரிய அந்தஸ்தையும் சிவகார்த்திகேயனுக்கு வழங்கிய படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் அதைத்தொடர்ந்து பல படங்களில் அடுத்தடுத்த ஆண்டுகளில் சிவகார்த்திகேயன் நடிக்க தொடங்கினார் மான் கராத்தே காக்கி சட்டை ரஜினி முருகன் ரெமோ வேலைக்காரன் சீமராஜா போன்ற பல படங்களில் நடித்தார் சிவகார்த்திகேயன் பெரும்பாலும் இதில் அத்தனை படங்களும் வெற்றி படங்களாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சறுக்கலில் சிவா
2018 இல் நடிகர் என்ற அந்தஸ்தையும் தாண்டி தயாரிப்பாளர் என்ற புது அவதாரத்தை தோற்றார் அந்த திரைப்படம் சத்யராஜ் தந்தையாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் மகளாகவும் நடித்த கனா திரைப்படம் பெரும் பற்றியும் மக்கள் மத்தியில் நல்ல பெயரையும் வாங்கிய கனா திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது 2019ல் நம்ம வீட்டுப் பிள்ளை என்ற திரைப்படம் அவருக்கு ஒரு சிறப்பான அந்தஸ்தை கொடுத்தது ஆனால் அதற்குப் பின்னால் வந்த ஹீரோ வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் 2021 ஆம் ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் படம் அவருக்கு பெரிய புகழை வாங்கி கொடுத்தது.
அமரன்
அதற்குப் பிறகு டான் பிரின்ஸ் போன்ற திரைப்படங்கள் பெரிதியா வரவேற்பை தெரிவித்தாலும் கூட 2023 இல் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் என்ற திரைப்படம் அவருக்கு நல்ல நடிகன் என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது 2024 ஆம் ஆண்டு அயலாம் திரைப்படமும் அதற்கு பின்பு நடிகர் கமல்ஹாசன் உடைய தயாரிப்பில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ அதிகாரி முகந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை அமரன் என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது அந்த திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து பெரும் புகழை அடைந்தார்.

பராசக்தி
இப்பொழுது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டெட் நடிகராக திகழ்கின்ற சிவகார்த்திகேயன் நடிப்பில் பல படங்கள் படப்பிடிப்பில் இருந்தாலும் இயக்குனர் சுதா கொம்புராவினுடைய இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த பராசக்தி என்ற திரைப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்கின்றார் இப்படி சினிமா உலகில் 12 ஆண்டுகளில் 25 படங்களில் நடித்து பராசக்தியாக புதிய அவதாரமாக எடுத்திருக்கின்ற சிவ கார்த்திகேயன் உடைய வளர்ச்சி என்பது ஒரு பிரம்மாண்டமான பிரமிக்கத்தக்தாக ஆச்சரியப்படக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது. ஆனால் அதற்கு பின்னால் இருக்கின்ற வரிகளும் காயங்களும் ரதங்களும் அதனால் ஏற்பட்ட தழும்புகளும் அதன் நினைவுகளும் கண்ணீரும் சிவ கார்த்திகேயன் என்ற கடின உழைப்பாளிக்கு மட்டுமே தெரியும் இன்று தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக விளங்குகின்ற சிவ கார்த்திகேயன் என்ற இடம் நடிகன் பிறந்தது 1985 பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி இதே நாளில் தான்.

இன்றைய தினத்தில் இன்னும் பல சாதனைகளை புரிந்திடவும் பல படங்களில் நடித்து பல துறைகளில் முன்னேறிடவும் சிவகார்த்திகேயனுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை காற்றளையில் பறக்க விடுகிறது சூரியன் எப்.எம். கே எஸ் நாதன் சூரியன் எப் எம் கோவை.