நடிகர் சிவகுமார் தமிழ் திரை உலகின் மார்க்கண்டேயன் என்ற புகழுக்குரியவர். நான்கு சகாப்தங்களாக நீடிக்கும் சிறந்த நடிகர். ஒரு காலத்தில் முன்னணி மற்றும் ஆதரவாக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த பெருமை பெற்ற புகழ் பெற்ற நடிகர்.
1965-ல் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் காக்கும் கரங்கள் படத்துல அறிமுகமானார். இந்த படம் 19 ஜூன் 1965 அன்று வெளிவந்தது. நடிகர் சிவகுமார் எந்த கதாப்பாத்திரத்தையும் அர்ப்பணிப்போடு சிறப்பாக செய்யக்கூடியவர். அவரின் சிறந்த நடிப்பிற்கு கந்தன் கருணை, திருமால் பெருமை, உயர்ந்த மனிதன் இப்படி பல படங்களை சொல்லலாம்.

1979-ல் தமிழ் திரையுலகில் பெரிய வெற்றியை தந்தது இவர் நடித்த ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம். 1985 வெளிவந்த இயக்குனர் கே .பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த சிந்து பைரவி திரைப்படமும் மாபெரும் வெற்றியே. ரோசாப்பூ ரவிக்கைக்காரி ,வண்டிச்சக்கரம் இந்த இரண்டு படங்களும் சிறந்த நடிகருக்கான Filmfare விருதுகளை பெற்று தந்த திரைப்படங்கள். 2007-ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார்சிவகுமார். அவன் அவள் அது, அக்னி சாட்சி படங்களுக்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் பெற்றார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன்,எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஆர். முத்துராமன், ஏ.வி.எம். ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கமல்ஹாசன் ,ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு, கார்த்திக், மோகன், அர்ஜுன், அஜித், விஜய், விக்ரம் மற்றும் சூர்யா உட்பட மூன்று தலைமுறைகள் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் சிவகுமார். நடிகை ராதிகாவுடன் இணைந்து சித்தி மற்றும் அண்ணாமலை போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர்.
சிவகுமார் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவி பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி ஊக்க படுத்தி வருகிறார். நான்கரை ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து எந்த விதமான குறிப்பையும் கையில் வைத்து கொள்ளாமல் சுமார் 6500 க்கும் மேற்ப்பட்டொர் கூடியிருந்த கூட்டத்தில் 200 பாடல்களை குறிப்பிட்டு காட்டி பேசினார்.
சமீபத்திய காலங்களில் இந்து இறையியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் தனது கருத்தை தெரிவித்த நடிகர் சிவகுமார் பொதுப்பேச்சில் இறங்கி அவரது பேச்சு பலரால் கவரப்பட்டு பாராட்டும் பெற்றார்.
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் சிவகுமார் அவர்களுக்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
Article by RJ Valli Manavaalan