பொதுவாக கேரளா என்றாலே எல்லாருக்கும் இயற்கையும், இதமான காலநிலையும், இனிமையான குரலும் ஞாபகம் வரும் … இறைவன் ஓய்வெடுக்க படைக்கப்பட்ட கேரளத்தில் தன் பாடல்களால் இசை தேவதையாக கொண்டாடப்படக் கூடியவர் பாடகி சுஜாதா அவர்கள் .
சுஜாதா பள்ளிப் பருவத்திலிருந்தே கே.ஜே.யேசுதாஸின் மேடை கச்சேரியில் பின்னணி பாடி வந்துள்ளார். 1975-ல் M.K.அர்ஜுனன் இசையில் வெளிவந்த Tourist Bungalow என்ற மலையாள திரைப்படத்தில் பின்னணி பாடகியாக தன் முத்திரையை பதித்தவர் சுஜாதா. 1977-ம் ஆண்டு தனது 12வது வயதில் இசைஞானி இளையராஜாவின் இசையில் “கவிக்குயில்” எனும் திரைப்படத்தில் “காதல் ஓவியம் கண்டேன்” எனும் பாடலைப் பாடி, தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

பிறகு காயத்ரி படத்தில் காலை பனியில் ஆடும் மலர்கள் என்ற பாடலை பாடினார். பல வருடங்களுக்கு பின் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரோஜா படத்தில் புது வெள்ளை மழை என்ற பாடலை பாடி தமிழ் இசை ரசிகர்களை குளிர்வித்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார். இளையராஜா, ரஹ்மான் தொடங்கி தேவா , ராஜ்குமார், வித்யா சாகர் , இமான் என பலரின் இசையில் பாடிவரும் சுஜாதாவின் மகள் ஸ்வேதாவும் தாயைப் போல் பின்னணியில் முன்னணி பாடகியாக பல படங்களில் பாடி வருகிறார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பாடி இசை வானம்பாடியாக வளம் வரும் பாடகி சுஜாதா 1993, 1996, 2001-ல் தமிழ்நாடு அரசு வழங்கும் Best female playback singer, 1998, 2001, 2004-ல் Best female playback singer in Asianet Film Awards மற்றும் 1996, 1998, 2006-ல் கேரளா மாநிலம் வழங்கும் Best female playback singer விருதையும் தட்டிச்சென்றார்.
![Swapnam Kanum Penne | Yesudas & Sujatha [ Baby Sujatha ] Song Selection SADIQ CZ Mobile 8547552475 - YouTube](https://i.ytimg.com/vi/q1A-jIQR-vw/hqdefault.jpg)
1991, 2003, 2004, 2005-ம் ஆண்டுகளில் கேரளா மாநிலம் வழங்கும் கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க Best female playback singer விருதையும் பெற்றார். எண்ணிலடங்கா விருதுகளை பெற்று, தொடர்ந்து தன்னுடைய மதுர குரலால் கேட்போரை கிறங்க வைக்கும் சுஜாதா அவர்களுக்கு SURYAN FM சார்பில் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.