அறிமுக இயக்குனர் விவேக் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் திரைப்படம் பாக்சர். இப்படத்தை குறித்த ஒரு பதிவை அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இப்பதிவில் பாக்சர் திரைப்படத்திற்காக தான் கடுமையாக உழைத்து வருவதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி “தன்னை இன்னும் நிறைய தயார்படுத்திக்கொள்ள வேண்டியதுள்ளது எனவும், முழுவீச்சில் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை” என்றும் கூறியுள்ளார்.
“இப்படத்திற்கு கடுமையான உழைப்பும், மனவலிமையும் தேவைப்படுகிறது” என கூறிய அருண் விஜய் “ப்ரொடக்ஷன் நிறுவனம் தெளிவான அறிவிப்பை கொடுத்த பிறகே படத்திற்கான வேலைகள் தொடங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
பாக்ஸர் திரைப்படத்தின் வில்லன் புகைப்படங்களை திரைப்பட குழு வெளியிட்டுள்ளது…
அருண் விஜயின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக இப்படத்தின் Update-க்காக காத்திருந்த நிலையில், இந்த தகவல்களை அருண் விஜய் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். இப்படத்தை குறித்த முதல் அறிவிப்பை, அருண் விஜய் 2018-ஆம் ஆண்டே வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை மேலும் காத்திருக்க வேண்டுகோள் விடுத்த அருண் விஜய், அடுத்த அறிவிப்பு வரும் வரை அப்படத்தின் பிரத்யேக புகைப்படம் ஒன்றை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தில் அருண் விஜய் வித்யாசமான தோற்றத்தில் போஸ் கொடுத்திருப்பார்.
பாக்சர் படத்தை பற்றி அருண் விஜயின் ட்விட்டர் பதிவையும், அப்படத்தின் பிரத்யேக புகைப்படத்தையும் கீழே காணுங்கள்.