Cinema News Stories

2 YEARS OF ‘TAANAKARAN’

“டாணாக்காரன்” – தமிழ் சினிமா ரசிகர்கள் எத்தனையோ விதமான காவல்துறை கதைக்களம் கொண்ட படங்கள பாத்திருப்போம். அதுவும் எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா-னு பலரையும் போலீஸா நாம பாத்திருக்கோம். ஒவ்வொரு முன்னணி நடிகர்களுக்கும் காக்கிச்சட்டை போட்டு போலீஸ் கதாபாத்திரத்தில நடிக்கனும்னு ஆசை இருக்கும்.

சில நடிகர்கள திரைல பார்க்கும் போது இவரு நிஜமாவே போலீஸ் தான் அப்படினு நம்மல நம்ப வைக்கரு மாதிரி இருப்பாங்க, அதுல முக்கியமா முதல் இடத்துல இருக்கறது கேப்டன் விஜயகாந்த். இப்ப வரை போலீஸ்னா எல்லாருக்கும் கேப்டன் முகம் கண்டிப்பா நியாபகம் வந்துட்டு போகும்.

இப்படி காவல்துறை சம்பந்தப்பட்ட பல படங்களை பார்த்து கொண்டாடின தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, ஒரு புதுவித கதைக்களத்தோட காவல் பயிற்சில நடக்குற உண்மை சம்பவங்களை சொல்ற ஒரு படமா வெளியானது தான் டாணாக்காரன்.

இதுவரை நாம பார்த்த போலீஸ் படங்கள் எல்லாத்தையும் இயக்கினது நமக்கு தெரிஞ்ச பல முன்னணி இயக்குனர்கள், புதுமுக இயக்குனர்கள். இந்த இயக்குனர்கள் எல்லாரும் காவல்துறை சம்மந்தமா எடுத்த படங்களுக்கு கதை, திரைக்கதை எழுத உண்மை சம்பவமோ, கற்பனையோ அதை விவாதிக்க காவல்துறை உதவிய நாடியிருப்பாங்க.

ஆனா டாணாக்காரன் படத்தை இயக்கினதே ஒரு காவல்துறை அதிகாரி தான் “இயக்குனர் தமிழ்”. 1997-ல காவல்துறை பயிற்சில நடந்த உண்மைச் சம்பவங்கள அடிப்படையா வச்சு தான் இந்த படம் எடுத்திருப்பாங்க. டாணா ஹிந்தி வார்த்தை, டாணாக்காரன்னா காவல்காரன்.

பல வருடங்களா ஒரு வெற்றிப் படத்துக்காக காத்திருந்த நடிகர் விக்ரம் பிரபுக்கு இந்த படம் ரசிகர்கள் கிட்ட பெரும் வரவேற்ப வாங்கி தந்துச்சு. அறிவழகன் கதாபாத்திரத்துல காவல்துறை பயிற்சில நடக்குற அநியாயங்கள எதிர்த்து போராடுற போதும், உயர் அதிகாரிகள் தர தண்டனைகளை சலிக்காமா ஒவ்வொரு முறை செய்யும் போதும், படம் பாக்குற நாம அந்த தண்டனையையும் பயிற்சியையும் செய்ற ஒரு உணர்வ தன்னோட நடிப்பு மூலமா தந்திருப்பாரு விக்ரம் பிரபு.

படத்துக்கு மிகப்பெரிய பலமா அமைஞ்சது கதாபாத்திர தேர்வுகள்.
ரொம்ப கண்டிப்பான காவல் பயிற்சி அதிகாரியா வர லால், பல வருஷங்களா அதே வேலை, அதே இடம்னு எந்த முன்னேற்றமும் இல்லாத கவலையோட இன்னொரு பயிற்சி அதிகாரியா வர MS. பாஸ்கர்.

காவல்துறை பயிற்சிக்கு வரவங்களுக்கு Law class எடுக்குற அதிகாரிய வர போஸ் வெங்கட், ஹீரோயின் அஞ்சலி நாயர், காவல் பயிற்சி Squad-ல இருக்க ஒவ்வொரு நடிகர்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடிக்க வச்சிருப்பாரு இயக்குனர் தமிழ்.

காவல் பயிற்சினா… போவாங்க… மூணு, நாலு மாசம் இருப்பாங்க அப்பறம் போஸ்டிங்! இப்படினு நாம நெனச்சிருப்போம். அதுல ஒன்னு கூட நிஜமும் இல்ல, சுலபமும் இல்ல. படத்தோட ஆரம்பத்துல ப்ரிட்டிஷ் காலத்துலயே காவல்துறை பயிற்சி உருவான விதம், சுதந்திரம் வாங்கின பிறகும் காவல்துறை பயிற்சில மாறாத பல விஷயங்கள அனிமேஷன்ல சொல்லியிருப்பாங்க.

Squad பிரிப்பாங்க, போட்டி நடத்துவாங்க, பரேட் நடக்கும், தோக்குற Squad-க்கு திரும்ப சில மாதங்கள் பயிற்சி நடக்கும். இப்படி படத்தோட ஒவ்வொரு சீனையும் பார்க்கும் போது காவல் பயிற்சில இருக்க நபரா நாம பயணம் பண்ண ஆரம்பிச்சிடுவோம்.

என்ன தான் நாம நேர்மையா இருந்தாலும் சில இடங்கள்ல அந்த நேர்மை நமக்கு பயனளிக்காது. அந்த மாதிரி பயிற்சில நடக்குற பல கொடுமைகள உயர் அதிகாரிகிட்ட விக்ரம் பிரபு கொண்டு போனாலும், ஒண்ணு அது பிரச்சினையா மாரி விக்ரம் பிரபுக்கு தண்டனை கிடைக்கும். இல்லனா அதுக்கான நடவடிக்கை எடுத்திருக்கமாட்டாங்க.

அதுக்காகவே படத்தோட இறுதியில ஒரு காட்சி இருக்கும், உயர் அதிகாரிகள் எங்கேயும் தங்கள விட்டுக்கொடுத்துக்க மாட்டாங்கனு. படத்துல வர ஒவ்வொரு காட்சியையும் ரொம்ப சிறப்பா சிரமப்பட்டு எடுத்திருப்பாரு இயக்குனர் தமிழ்.

ஒரு சீன்ல அந்த காவல் பயிற்சி நடக்குற இடத்துல இருக்க மரத்தையும், அதுக்கு பக்கத்தில நிக்குற காவல் அதிகாரி பத்தியும் MS பாஸ்கர் விக்ரம் பிரபுகிட்ட சொல்லுவாரு, அதெல்லாம் மனசளவுல காவல்துறை பயிற்சிய பத்தின ஒரு பயத்த கொடுத்துச்சு.

இப்படி டாணாக்காரன்ல வர ஒவ்வொரு சீன் பத்தியும் புகழ்ந்துகிட்டே போகலாம். டாணாக்காரன் தியேட்டர்ல ரிலீஸ் ஆகாம OTT-ல தான் ரிலீஸ் ஆச்சு, தியேட்டர் வந்திருந்தா கண்டிப்பா நல்ல வரவேற்பு இன்னும் பெற்று, நிறைய Collection அள்ளியிருக்கும். இன்னும் நீங்க டாணாக்காரன் படம் பாக்கலனா கண்டிப்பா பாருங்க ஒரு சிறந்த படைப்ப பார்த்த அனுபவத்த கொடுக்கும்.

Article By RJ SRINI