Specials Stories

ZOO LOVERS DAY

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 8 ஆம் தேதி, தேசிய உயிரியல் பூங்கா காதலர்கள் தினம், உள்ளூர் உயிரியல் பூங்காக்களை ஆராய ஊக்குவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் உயிரியல் பூங்காக்களுக்குச் சென்று அங்கு வாழும் பல விலங்குகளைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள்.

விலங்கியல் பூங்காக்கள் பல இனப்பெருக்க மையங்களாக செயல்படுகின்றன. இனங்கள் அழியும் போது அல்லது அழியும் அபாயத்தில் இருக்கும் போது இந்த வசதிகள் மீது நம்பிக்கை ஏற்படுகிறது. பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பற்றிய கல்வியையும் இவை பொதுமக்களுக்கு வழங்குகின்றன.

கிமு 7 ஆம் நூற்றாண்டு கிரேக்கர்கள் விலங்குகளை அடைத்து வைக்க பழகினர். அலெக்ஸ்சாண்டரின் ராணுவ பயணத்தின் போது பல விலங்குகள் கைப்பற்றப்பட்டு கிரேக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. பண்டைய எகிப்திய மற்றும் ஆசிய உயிரியல் பூங்காக்கள் முதலில் பொது இன்பத்திற்காகவும், இரண்டாவது அறிவியல் ஆய்வுக்காகவும் பயன்படுத்தப்பட்டன.

கல்வி கற்கும் மாணவர்களுக்கு புகைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒரு விலங்கை பற்றி தெரிந்து கொள்வதை விட உயிரியல் பூங்காக்களுக்கு சென்று அதன் அருகில் நின்று பார்க்கும் போது விலங்குகளை பற்றி தெளிவாக மாணவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. இன்று பல இடங்களில் மரங்களை பார்ப்பது கூட அதிசயமாகி விட்டது.

அந்த விதத்தில் உயிரியல் பூங்காக்களில் விலங்குகளை பாதுகாக்கும் விதத்தில் சுற்றுச்சூழலை காக்கும் விதத்தில் பல மரங்களை காண முடிகிறது. இருப்பினும் பல இடங்களில் உள்ள உயிரியல் பூங்காக்களை அகற்றும் செய்தியை கேட்கும் போதும் பார்க்கும் போதும் வருத்தமாக உள்ளது. நம் தமிழகத்தில் அனைவராலும் அறியப்பட்ட மிகப்பெரிய உயிரியல் பூங்கா ’அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா’ தான்.

இது தமிழ்நாட்டின் வண்டலூரில் அமைந்துள்ள ஒரு விலங்கியல் பூங்கா ஆகும். இது தமிழ்நாட்டில் சென்னையின் தென்மேற்கு பகுதியில் உள்ளது. இது சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 31 கிலோமீட்டர் (19 மைல்) மற்றும் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த மிருகக் காட்சி சாலை 1855-ல் நிறுவப்பட்டது. இது இந்தியாவின் முதல் பொது உயிரியல் பூங்காவாகும்.

இந்த நாளில் மட்டும் பல லட்சக்கணக்கான மக்கள் தன் குடும்பத்தில் உள்ள அனைவரோடும் அருகில் உள்ள உயிரியல் பூங்காக்களுக்கு சென்று நேரம் செலவிடுகிறார்கள். நீங்களும் செல்லுங்கள்.என் சிறுவயதில் நான் மிகவும் அருகில் சென்று பார்த்து வியந்த விலங்கு சிங்கம் தான். அதன் அருகில் நின்று பார்க்கும் போதே அதன் கம்பீரமான தோற்றமும் பார்வையும் என்னை மிகவும் கவர்ந்தது.

உங்களுக்கு மிகவும் பிடித்த விலங்குகளை சென்று பார்த்து உங்கள் காதலை வெளிப்படுத்திவிட்டு இந்த நாளை சிறப்பாக்குங்கள்.

Article by RJ Karthi