Cinema News Stories

BEAST-க்கு வயசு 2

Beast – படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்ப சன் பிக்சர்ஸ் வெளியிட்ட நாள் முதலே தளபதி ரசிகர்களுக்கு பீஸ்ட் கொண்டாட்டம் ஸ்டார்ட் ஆயாச்சு . “மணி இப்போ மூணு கொஞ்ச நேரத்துல இருக்கு செம Scene-u ” ட்விட்டர்ல பீஸ்ட் படத்தோட firs look ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே ரசிகர்களோட மனசுல பல எதிர்பார்ப்ப உருவாக்கின படம் தான் பீஸ்ட் .

இயக்குனர் நெல்சன் தன்னுடைய இயல்பான அம்சத்துல படம் இருக்கக் கூடாதுன்னு முயற்சி பண்ணாலும் பல இடங்கள்ல இயக்குனர் நெல்சன் படத்தோட சாயல் எட்டி பாக்க தான் செஞ்சது . இயக்குனர் நெல்சன் அனிருத் தமிழ் சினிமாவில மாஸ் ஹீரோவான தளபதி விஜய் இப்படி எல்லாரும் ஒட்டுமொத்தமா சேர்ந்து தமிழ் ரசிகர்களோட எக்கச்சக்க எதிர்பார்ப்புல உருவாகி வெற்றியடைஞ்ச படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ்ன்னு இந்த முக்கிய கதாபாத்திரங்கள் படத்துக்கு கூடுதல் சிறப்பு.

ராஜஸ்தான் ஜோத்பூரில தான் பீஸ்ட் படம் ஸ்டார்ட் ஆகுது. அங்க இருக்குற குழந்தையோட கையில இருந்த பலூன் பறக்குது அப்போ வீரராகவனாக விஜய் என்ட்ரி ஆகி அந்த பலூனை பிடிச்சு குழந்தைகிட்ட கொடுக்கிறார். அங்க திடீர்னு நடக்கிற பயங்கரவாத தாக்குதல்ல அந்த குழந்தை இறந்து போக அதுல வீரராகவன் அப்செட் ஆகுற அந்த இடத்தில பீஸ்ட் டைட்டிலை போட்டு அப்படியே படம் ஸ்டார் ஆகுது. அப்புறம் என்ன ரசிகர்களோட ஆரவாரத்தில பீஸ்ட் படம் blast ஆயாச்சு.

சென்னையில இருக்க பிரபலமான mall பயங்கரவாதிகள்னால கைப்பற்றப்பட , மக்களை பயங்கரவாதிகள் கிட்ட இருந்து விஜய் எப்படி காப்பாத்துறாரு… அப்படிங்கற கதையை தான் சுவாரசியமாவும் இடையில இடையில நெல்சன் அவரோட பானிக்கு உரித்தான டார்க் காமெடியிலும் பீஸ்ட் படத்த நம்ப பாத்து ரசிச்சுறுப்போம்.

படத்துல பெரிய ஹைலைட் பாட்டு தாங்க. சிவகார்த்திகேயன் அவரோட வரிகள்ல, அனிருத் இசையில வெளிவந்த அரபிக் குத்து பாட்டு பேக்ரவுண்ட் செட்டிங்ல இருந்து காஸ்டியூம் வரைக்கும் எல்லாமே அரபிக் ஸ்டைல்ல பர்ஃபெக்ட்டா இருந்துச்சு. தளபதி விஜய் ஓட டான்ஸ் ரொம்ப யுனிக்காவும் , ரொம்ப வருஷத்துக்கு அப்புறமா ஒரு ஸ்டைலான டான்ஸ்ச இந்த பாட்டுல பாக்க முடிஞ்சது.

பல விமர்சனங்கல கடந்து , பல எதிர்பார்ப்புகளோட வெளிவந்த பீஸ்ட் படம் முதல் நாள்லலேயே ஏறத்தாழ 17 கோடிக்கு டிக்கெட் புக்கிங் ஆகி இருந்தது. அதுமட்டுமா படம் வெளியான ஏப்ரல் 13 அன்னைக்கு சென்னை , செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்கள்ல 1700 காட்சிகள் திரையிடப்பட்டதுனால முதல் நாளிலேயே அதிக காட்சிகள் திரையிடப்பட்ட படத்திற்கான சாதனையும் பீஸ்ட்டுக்கு கிடைச்சது.

லீனர், மீனர், ஸ்ட்ராங்கர், விஜயின் பீஸ்ட் படம் வெளிவந்து இன்னையோட ரெண்டு வருஷம் ஆகிறதுல படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்கிறது சூரியன் பண்பலை.

Article by RJ Vigithra

Tags