Cinema News Stories

7 years of ‘Power Paandi’

நம்ம வாழ்க்கையில ஒரு சில விஷயங்கள் மறக்கவே மறக்காது, ஒரு சில விஷயங்களை மறக்கவே கூடாது. மறக்கக் கூடாதது நம்ம கஷ்டத்துல இருக்கப்போ நமக்கு உதவி பண்ணவங்களை, மறக்க முடியாதது நம்மளுடைய முதல் காதல் & நம்ம வாழ்க்கையில நடக்கிற ஒரு மிகப்பெரிய மாற்றம் நம்ம எடுக்கக்கூடிய மிகப்பெரிய ரிஸ்க்.

இந்த மூன்று விஷயத்தையும் உணர்த்துற படம் தான் பவர் பாண்டி. எப்படி இந்த மூணு அந்த படத்துல இருக்குன்னு சொல்றேன்னா…
தனுஷ் அவரோட ஃபேமிலி கஷ்டத்துல இருந்தப்போ அவங்க அப்பா படம் பண்ணனும்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தப்போ அவருக்கு உதவியா நின்னவர் ராஜ்கிரண்.சோ பழசை மறக்காமல் அவரை ஹீரோவா வச்சு ஒரு படத்தை டைரக்ட் பண்ணாரு.

தான் வாழ்க்கையில தனுஷ் எடுக்கிற மிகப்பெரிய ரிஸ்க், நடிகரா அவரோட பயணம் ரொம்ப நல்லா போய்கிட்டு இருக்கும்போது டைரக்டர் அவதாரம் என்று ஒன்று எடுக்கிறார் அதை ரொம்ப சிறப்பாவும் செஞ்சு முடிக்கிறார் அப்புறம் அந்த படம் சொன்ன முதல் காதல், சோ இது எல்லாமே இருக்கிற ஒரு படம் தான் பவர் பாண்டி. அப்படிப்பட்ட படத்தை நம்ம யாராலும் மறக்க முடியாது 20, 25, 30 வயசுல பண்ற காதல ஏத்துக்காத சமூகத்துல வாழ்ந்துகிட்டு இருக்க போ கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து, பேரன் பேத்தி எல்லாம் எடுத்து அப்புறம் தன்னுடைய முதல் காதலியை தேடி போற ஒரு பயணம்.அந்த பயணம் எப்படி அமையப்போது அந்த காதல் ரெண்டு பக்கமும் அப்படியே இருக்குமா…

இந்த எந்த கேள்விக்குமே பதில் தெரியாம அந்த பதிலை தேடி போற ஒரு பயணம் தான் இந்த பவர் பாண்டி படம் ரொம்ப அழகா எந்த ஒரு கான்ரவர்சையுமே கிரியேட் பண்ணாம சைலன்ட்டா ஹிட் அடிச்ச ஒரு படம். ராஜ்கிரன் கூட ஒரு பேட்டில சொல்லி இருப்பாரு அந்த படத்தோட ஷூட்டிங் அப்போ என்ன தனுஷ் ரொம்ப அக்கறையோட பாத்துக்கிட்டாருனு. சோ பலச மறக்காமல் தனக்கு உதவி சோ பலச மறக்காமல் தன் குடும்பத்துக்கு உதவி பண்ணவர வச்சு ஒரு படம் எடுக்கிறோம். அந்த படத்தினால் அவருக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது அவருக்கு உரிய மரியாதை நம்ம கொடுக்கணும்.அதே மாதிரி நம்ம பண்ற ஒரு வேலை 100% நம்ம உழைப்பு கொட்டனும்னு இப்படி எல்லாத்தையும் யோசிச்சு யோசிச்சு பர்ஃபெக்ட்டா பண்ண படம்.

தனுஷ் ஒரு அழகான காலத்தால மறக்க முடியாத, மறக்க முடியாத ஒரு படைப்பு கொடுத்தார் அந்த படைப்போட பேர்ல மட்டும் பவர் இல்லை அந்தப் படைப்புக்கே ஒரு பவர் இருக்கு இப்படிப்பட்ட படம் ரிலீஸ் ஆகி ஏழு வருடம் ஆச்சு அப்படின்னா நம்ப முடியுதா..!

Article by RJ Joe