Cinema News Specials Stories

தனி ஒருவன் – தனித்துவம்

“எல்லோருக்கும் நல்லது பண்ண கடவுளால் கூட முடியாது, நாம என்ன..?”தனி ஒருவன் படத்துல வர வசனம் இது, வெளியாகி இன்றோடு 8 வருடங்களை நிறைவு செய்திருக்கிறது.

மற்றுமொரு Cat & Mouse Genre படம் என்று அவ்வளவு எளிதாக கடந்து போக முடியாது. முன் எப்போதும் வந்திராத புது வகை திரைக்கதை அமைப்புகளும் யுக்திகளும் படத்தில் நிறையவே இடம்பெற்றிருந்தன.
இதில் பணிபுரிந்த திரை கலைஞர்கள், தங்கள் தனித்துவத்தை மிகத்திறமையாக வெளிக்காட்டியிருப்பார்கள், அத்தனை தனி ஒருவன்கள்…!

அதுவரையில், ‘ரீமேக் படங்கள் மட்டுமே எடுக்கத் தெரிந்தவர்’ என்று பெயர் பெற்றிருந்த மோகன்ராஜா முதல் முறையாக எந்த திரைப்படத்தையும் ரீமேக் செய்யாமல் எடுத்த திரைப்படம் தனி ஒருவன்.. 2.30 மணி நேர திரைப்படம் என்றாலும் துளியும் தொய்வின்றி காட்சிகளை செதுக்கியிருப்பார்.

படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் அத்தனை நேர்த்தி, ரொம்ப நல்லவன் vs ரொம்ப கெட்டவன் வகையறா Template கள், எத்தனையோ பார்த்திருக்கிறோம். இருந்தாலும் புது வித திரைக்கதை, Sharp Dialogues, New Gen Vibe தரக்கூடிய இசை, சுவாரஸ்யம் கூட்டியது.

குறிப்பா சொல்லணும்னா, “வெளிச்சத்தில் இருக்கிறவன் தான் இருட்ட பாத்து பயப்படுவான், நான் இருட்டுலயே வாழ்றவன்” , “நான் செத்தாவது அவனை பிடிப்பேன்னு சொல்றதுல என்ன இருக்கு, நீ வாழ்ந்து அவன அரெஸ்ட் பண்ணனும், அது தான் சரி” இது போன்ற வசனங்கள் படத்துக்கு பெரிய ஒரு தாக்கத்தை கொடுத்தது.

திரைக்கதை பத்தி நிறைய சொல்லலாம். ஹீரோ, வில்லன ரிவெஞ்ச் எடுக்க, எடுக்குற முயற்சிகள் எல்லாமே வில்லனுக்கு ஈசியா தெரிஞ்சிருது அப்படிங்கிற மாதிரியான ஒரு விநோத கதை நகர்த்தல், ஒரு Operation-ல ஹீரோவோட கழுத்து பகுதியில் Microphone Chip பதிக்கப்பட்டு, அதன் ஒலிப்பதிவை Live-ஆ கேட்டு இவர் செயல்படுற மாதிரி கதை வச்சிருப்பாங்க.

கொஞ்சம் யோசிச்சு பார்த்தா இதுல என்ன லாஜிக் இருக்குன்னு தோணலாம், இருந்தாலும் அதை ரொம்ப நேர்த்தியா நம்பகத்தன்மையோட எடுத்திருப்பாங்க. அதற்கு ஒரு முக்கிய காரணம் என்று சொன்னா அரவிந்த் சுவாமியை சொல்லலாம், இவ்வளவு ஸ்டைலிஷ் ஆனா வில்லன்கள தமிழ் சினிமால ரொம்ப Rare-ஆ தான் பார்த்துருக்கோம், Negative Shade பெருசா தெரியாத அளவுக்கு நடிச்சிருப்பார்.

பொதுவா வில்லனாக நடிப்பவர் அவர வெறுக்க வைக்கணும், ஆனா மாறாக தனி ஒருவன் படத்துல வர்ற சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்த கதாநாயகன விட அதிகமா விரும்ப வெச்சிருப்பாரு, வில்லன் Portions மட்டும் இது மோகன்ராஜா படமா, இல்ல மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன் படமா? அப்படிங்கற அளவுக்கு இருக்கும் அந்த கதாபாத்திர வடிவமைப்பு.

அவ்வளவு Stylish ஆக இருக்கும் தீமை தான் வெல்லும் BGM ஓட அவர் நடந்து வரும்போது. இதுவரை தமிழ் சினிமாவில் இருந்த எல்லா வில்லன்களையும் Just Like That, மறக்கடிச்சுருப்பார் அரவிந்த்சாமி. கண்டிப்பா இசையை பத்தி சொல்லி ஆகணும் ஹிப் ஹாப் தமிழா ஆதி, ரொம்பவே வியக்க வைக்கிற இசையை இந்த படத்துல கொடுத்திருப்பார்.

படத்தின் முக்கியமான காட்சிகளை நினைத்து பார்த்தோம்னா இல்ல சவுண்டே இல்லாம பார்த்தா கூட அந்த பேக்ரவுண்ட் மியூசிக் நமக்கு இன்னும் மனசுல ஓடும். அந்த அளவுக்கு காட்சியோடு இணைந்திருக்கும் இசை. பாடல்களும் வேற லெவல் Hit, ‘தனி ஒருவன்’, ‘கண்ணால கண்ணால’ ஒரு Neat ரொமான்டிக் மெலடி, ‘காதல் கிரிக்கெட்’ Peculiar Voice ஓட அட்டகாசமான Peppy Number.

தேவையான அளவுக்கு உப்பு போல படத்துல நகைச்சுவை சேர்த்து இருப்பாங்க கொஞ்சம் தம்பி ராமையா, கொஞ்சம் (கொஞ்சும்) நயன்தாராவ வச்சும். தம்பி ராமையா, ஒரு அப்பாவியான Dummy அரசியல்வாதியா பலரை பிரதிபலிச்சிருப்பார்.

ஹீரோயினா வர நயன்தாராவும் ஏதோ கடனுக்கு ஒரு ஹீரோயின் இருக்காங்கனு இல்லாம, அவங்கள ஒரு Forensic அதிகாரியாக காமிச்சது நல்ல விஷயம், ஆனாலும் அந்த சீசன்ல நயன்தாரா கையில பீர் பாட்டில் இருந்தா படம் ஹிட்டுங்கற சென்டிமென்ட்க்கு இந்த படக் குழுவும் விதிவிலக்கு இல்ல,

Last But Not Least, Hero ஜெயம் ரவி, Class-ல எப்பவும் First வர ஒரு Student போல, எந்த கேள்வி கேட்டாலும் கைய தூக்கி ஆன்சர் பண்ற மாதிரி இருக்குற நல்ல போலீசா ஜெயம் ரவி, ரொம்ப மிடுக்கா நேர்த்தியா நடிச்சிருப்பாரு… இந்த படத்தோட வெற்றி IMDB Rating-ல 8.4 கிடைத்ததும், வெறும் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பல மடங்கு சம்பாதித்துக் கொடுத்ததோ அல்ல,

சமூக வலைதளங்களில் இப்படி ஒரு சூப்பரான படத்துல அஜித் விஜய் நடித்திருக்கலாம், ஏன் ரஜினி கமல் கூட நடித்திருக்கலாம்-னு மக்கள் அவ்வளவு சிலாகித்து பேசிட்டு இருந்ததது தான். தமிழ் சினிமாவை பெருமைப்படுத்த அவ்வப்போது இந்த மாதிரி திரைப்படங்கள் அத்திப் பூத்தது போல வருவது வழக்கம், அதுல தனி ஒருவனுக்கு எப்போதும் தனி இடம், தனி ரசிகர்கள் இருக்காங்க தமிழ் சினிமால…

பார்ட் 2-க்கு இந்த படத்தோட குழு தயாராகிவிட்டது. இந்தப் படத்தோட வெற்றி போலவே பல மடங்கு வெற்றியடையனும் நிறைய ஆச்சரியங்களும் நமக்காக அதுக்குள்ள காத்திருக்கணும்னு ஆசையோடு வாழ்த்துகிறது சூரியன் FM.

Article by Roopan Kanna VP