Specials Stories

Time Travel பத்தின இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Time Travel பத்தி கேள்விப்பட்டிருக்கிங்களா? கண்டிப்பா கேள்விபட்டிருப்பிங்க. ஏன் நம்மளே Social Media-ல சில Photos, Time Travel சம்மந்தமா பாத்திருப்போம். இவங்கெல்லாம் Time Travel பண்ணி இந்த Photo-ல இருக்காங்கனு ஆச்சர்யமா கூட சில Photos-அ பாத்திருப்போம். இது உண்மையா சாத்தியமா? அப்படி Time Travel பண்ணா என்ன நடக்கும்னு நினைச்சு பாக்கும்போதே ஒரு மாதிரி ஆச்சர்யமா இருக்குல்ல? Time Travel உண்மையா, இல்லையா?

அதோட ஆச்சர்யமூட்டும் தகவல்களதான் இப்ப நாம பாக்க போறோம். இந்த Time Travel உண்மையா அப்படினு கேட்டிங்கன்னா சில வரலாற்று கதைகள்ல இது உண்மைன்னு சொல்லப்பட்டிருக்கு. ஆனா அதை யாரும் வெளிப்படையா சொல்லலனுதான் சொல்லனும். இந்த உலகத்துல ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு நேரம் இருக்கும்னு உங்க எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கும்னு நினைக்குறேன்.

ஆனா இந்த மொத்த பிரபஞ்சத்துக்கும் ஒரு Universal Clock இருக்கு அதனுடைய உதவியாலதான் இந்த Time Travel பண்ண முடியும்னு சொல்றாங்க. அந்த காலத்துலயே இந்த காலப்பயணம் சாத்தியம்னு சொல்ற அளவுக்கு சில கதைகள் எழுதப்பட்டிருக்கு.

ஜப்பானிய கதையான யுராஷிமா டாரோ அப்படிங்குற ஒரு புராணக்கதைல கூட துறவி ஒருத்தர் கடலுக்கடியில உள்ள ஒரு ராஜாவ பாத்துட்டு 3 நாள் கழிச்சு திரும்ப மேல இருக்குற அவரோட ஊருக்கு திரும்ப வரப்போ அங்க 300 வருசம் ஆனதாக அந்த புத்தகத்துல எழுதியிருப்பாங்க. ஏன் நம்ம ஊருலயே மஹாபாரதத்துலகூட ஒரு முனிவர் மேல உள்ள பிரம்மதேவரை பாத்துட்டு திரும்ப பூமிக்கு வரும்போது பல யுகங்கள் கடந்ததா சொல்லிருக்காங்க.

குரானில் அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்னும் குகையினைப் பற்றி சொன்ன வசனத்தில், சில வாலிபர்கள் உயிர் தப்ப அந்த குகையினுள் சென்ற போது அவர்கள் அதிலிருந்து தப்பி 300 ஆண்டுகள் கழித்து தான் வெளியே வந்ததாக சொல்லிருக்காங்க.

1895-ல வெளிவந்த H.G. Wells எழுதுன The Time Machine அப்படிங்குற Book-லதான் Time Machine மூலமா Time Travel பண்ணலாம், அப்போ Time Travel பண்ணுறது மூலமா என்னென்னா நடக்கும்னு சொல்லிருப்பாங்க. நம்ம ஐன்ஸ்டினோட கொள்கை என்னன்னா, ஒரு பொருளை ஒளியின் திசைவேகத்திற்கு இணையாக முடுக்க வேண்டுமென்றால் வினாடிக்கு 3,00,000 Km வேகத்தில் செல்ல வேண்டும்.

இந்த வேகத்தில் நமது பூமியை வெறும் ஒரு வினாடியில் சுற்றிவிடலாம். அதாவது நம்ம டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்துல கூட காட்டிருப்பாங்கலே அந்த மாதிரி. இது நம்ம நடைமுறைக்கு சாத்தியம் கிடையாது ஆனா இதுதான் வழி அப்படின்னு சொல்லிருக்காங்க.

அப்படி உண்மையிலேயே இந்த காலப்பயணம் சாத்தியாமயிருக்கும் அப்படின்னா எதிர்காலத்துல இருந்து யராவது இங்க வந்துருக்கனும். அப்படி யராவது வந்து நீங்க பாத்திருக்கீங்களா. இதுவரைக்கும் Time Travel இன்னும் சாத்தியப்படல. ஆனா எதிர்காலத்துல கண்டிப்பா இதுக்கான வாய்ப்புகள் இருக்குன்னு பல அறிவியலாளர்கள் அவங்களோட கருத்த வெளிப்படுத்திட்டுதான் இருக்காங்க.

Article By Smily Vijay