Cinema News Stories

அநீதி படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள்! – அர்ஜூன் தாஸ்

அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில், விஷால் வெங்கட் இயக்கத்தில், சுதா சுகுமார் தயாரிப்பில், சுரேந்தர் சிகாமணி இணை தயாரிப்பில், கெம்ப்ரியோ பிக்சர்ஸ் (GEMBRIO PICTURES) நிறுவனத்தின் முதல் தயாரிப்பு பூஜையுடன் துவங்கியது!

GEMBRIO PICTURES தயாரிக்கும் Production No 1 இனிதே துவங்கியது. GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர் ஆகியோர் நடிக்க, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படப்புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெயினர் டிரமாவாக உருவாகும் புதிய திரைப்படம், இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள LV Prasad Lab-ல் சிறப்பான பூஜையுடன் தொடங்கியது.

படம் குறித்து நடிகர் அர்ஜூன் தாஸ் பேசியதாவது, “இந்த படத்தில், மிகப் பெரிய சுவாரஸ்யம் காத்திருக்கிறது. நாசர் மாதிரி பெரிய ஆக்டருடன் வேலை செய்யப் போகிறேன். இமான் சாரின் ரசிகன் நான். அவர் இசையமைக்கும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. ஷிவாத்மிகாவிற்கு வாழ்த்துக்கள்.

விஷால் மதுரை வந்து கதை சொன்னார். 3 மணி நேரம் சொன்னார். அப்போதே ஓகே சொல்லிவிட்டேன். அவரை நம்பி முழுமையாக என்னை ஒப்படைத்து விட்டேன். அநீதி படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். தயாரிப்பாளர்களுக்கு இந்தப்படம் வெற்றிப்படமாக இருக்கும் அனைவருக்கும் நன்றி.” என்று கூறினார்.

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.