Cinema News Stories

விடாமுயற்சி: அஜித் குமாருடன் பிரச்சனை? படத்திலிருந்து விலகுகிறதா லைகா புரொடக்ஷன்ஸ்!

துணிவு வெற்றிக்குப் பிறகு அஜித்குமாரின் அடுத்த படத்தை லைகா நிறுவன தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அஜித் மற்றும் தயாரிப்பு தரப்பிற்கு திரைக்கதை திருப்தி அளிக்காதததால், விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து விலகினார்.

பின்னர், இயக்குனர் மகிழ் திருமேனி அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. மகிழ் திருமேனி – அஜித் கூட்டணி என்பதால் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் “விடாமுயற்சி” என்று படத்திற்கு தலைப்பும் வைக்கப்பட்டது. விடாமுயற்சி ஒரு அதிரடி ஆக்‌ஷன் படம் என்பதை தவிர நடிகர்கள் மற்றும் பட்க்குழுவினர் பற்றிய மற்ற விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

நாயகியாக நடிக்க த்ரிஷாவும், அனிருத் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக சில நாட்களாக செய்திகள் வெளியாகின. அஜித் World Bike Trip சென்றுவந்ததும் படப்பிடிப்பு ஆரமபம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததது. ஆனால் வேறு எந்த Update-ம் சரிவர வெளிவரததால் சமூகவலைத்தளங்களில் விடாமுயற்சி Update கேட்டு பல Memes-கள் உலாவர ஆரம்பித்தது.

இந்நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் இப்படத்திலிருந்து விலகுவதற்காக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூறப்பட்ட நேரத்தில் படப்பிடிப்பு தொடங்காமல் தாமதமானதால் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் அஜித் குமாருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் லைகா புரொடக்ஷன்ஸ் இப்படத்திலிருந்து விலகுவதற்கான முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்தத்தரப்பில் இருந்தும் இன்னும் வரவில்லை.

Article By Sathishkumar Manogaran

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.