Cinema News Stories

13 Years of ‘அவன் இவன்’

பாலா டைரக்ஷன்ல வந்த ‘அவன் இவன்’ படம் தமிழ் சினிமாவுல அண்டர் ரேட்டட் ஆன ஒரு படம். அவன் இவன் ரிலீஸ் ஆகி 13 வருடம் ஆகிருச்சு. எதார்த்தத்தோட கமர்சியல் மாட்டர்ஸ் ஒன்னா சேர்ந்து கொடுத்த அழகான படங்களில் இதுவும் ஒன்னு. பிதாமகனுக்கு அப்புறம் பாலா சார் டைரக்ஷன்ல காமெடி பெருசா இருந்து சூப்பரா வொர்க் அவுட் ஆன படம் தான் அவன் இவன். உதாரணமா குடும்பத்துக்குள்ள சண்டை வர ஒரு சீன் இருக்கும்.

விஷால், ஆர்யா, அம்பிகானு ஆரம்பிச்சு எல்லாரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பாங்க. விஷால் அவர்களோட கரியர் பெஸ்ட் படம் அப்படின்னா ’அவன் இவன்’ தான். நடிகர் சூர்யா இந்த படத்துல நடிகராகவே நடிச்சிருப்பாரு. அவர் வர சீன்ல விஷால் அவர்கிட்ட நடித்துக் காட்டுவது யாராலயும் இன்னிக்கு வரைக்கும் மறக்க முடியாது.

ஆர்யாவோட கும்பிடுற சாமி டயலாக் இன்னைக்கு வரைக்கும் ஒரு மீம் மெட்டீரியல் தான் 😂 விஷால் அவர்கள் இந்த படத்துல நடிச்சு 13 வருஷம் ஆகிடுச்சு அவருக்கு மைக்ரேன் ப்ராப்ளம் வந்தும் 13 வருஷம் ஆகிடுச்சு. இந்த படத்துல அவர் போட்ட உழைப்பால இப்ப வரைக்கும் தலைப்பகுதியில் பல பிரச்சனைகள் இருக்குன்னு நிறைய இன்டர்வியுஸ்ல சொல்லி இருக்காரு.

பாலா ஓட டைரக்சன்ல யாரு நடிச்சாலும் அவங்க முழுமையான நடிகர்களா மாறிடுவாங்க.

விக்ரம் – சேது
சூர்யா – நந்தா
ஆர்யா – நான் கடவுள்
விஷால் – அவன் இவன்

எல்லா நடிகர்களும் அவங்களோட கரியர் பெஸ்ட் பெர்ஃபார்மன்ச டைரக்டர் பாலா படத்துல குடுப்பாங்க, அவங்கள அப்படி நடிக்க வைக்கிற ஒரு இயக்குனர் தான் பாலா. எதார்த்த மனிதர்கள் பத்தி நிறைய படங்கள் வந்திருக்கு. ஆனா அது கமர்ஷியல் பெஸ்ட்டா இருக்கா அப்படின்னு கேட்டா அது கேள்விக்குறி தான். இது இரண்டையும் அழகா Blend பண்ணக்கூடிய டைரக்டர்கள்ல பாலாவும் ஒருத்தர்.

எந்த பெரிய ஸ்டார்சும் நீங்க ஒரு பெண் வேடம் அணிந்து இன்ட்ரோ சாங் ஆடணும்னு சொன்னா ஒத்துக்க மாட்டாங்க. ஆனா இந்த படத்துல விஷால் அவர்கள் அந்த விஷயத்தை சிறப்பாக பண்ணி இருப்பாரு. அவன் இவன் படம் தமிழ் சினிமாவுல நாம கொண்டாட வேண்டிய ஒரு நல்ல கமர்ஷியல் சினிமா. 13 வருடங்கள் ஆகிய இன்றைக்கு படத்த ப்ரொடியூஸ் பண்ண ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும், டைரக்டர் பாலா அவர்களுக்கும் மற்ற நடிகர்களுக்கும் சூரியன் எப்எம் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் சல்யூட்.

Article By RJ Vishal