Cinema News Stories

ரெட் வெல்வெட் கேக்

Madonna

உங்களுக்கு எப்படினு தெரியல, ஆனா எனக்கு Madonna Sebastian பத்தி யோசிச்சாலே red velvet cake தான் ஞாபகம் வரும். ஆமாங்க Premam படத்துல அவங்க அந்த red velvet cake சாப்பிடுற அழகு இருக்கே… இன்னும் என் கண்ணுக்குள்ளயே இருக்குது.

Premam படம் நம்ம தமிழ் மக்கள் கிட்ட எவ்ளோ பெரிய hit குடுத்துச்சினு எல்லாருக்கும் நல்லா தெரியும். அந்த படம் மூலமா cine industry க்கு அறிமுகமானாங்க. Actually இவங்களோட dream ஒரு singer ஆகணும் அப்டிங்குறது தான். அதுக்காக நிறைய hardwork பண்ணிருக்காங்க. singing competition எங்க நடந்தாலும் அங்க அதுல கண்டிப்பா கலந்துப்பாங்களாம்.

நிறைய stage ல பாடிருக்காங்க, அது மூலமா அவங்களோட 15 வயசுலே படத்துல நடிக்குற வாய்ப்புகளும் வந்துருக்கு. ஆனா singing-ல தான் முக்கியத்துவம் குடுத்துருக்காங்க Madonna. ஒரு Tv show ல பட்டு பாடின போது அத premam பட இயக்குனர் பாத்துட்டு audition க்கு வர சொல்லி premam படத்துல நடிக்குறதுக்கு வாய்ப்பு குடுத்துருக்காங்க.

அதுக்கு அப்பறம் அவங்க அப்பா கிட்ட permission வாங்கிட்டு நடிக்க ஆரம்பிச்சுருக்காங்க. தமிழ் சினிமால காதலும் கடந்து போகும் படம் மூலமா அறிமுகமானாங்க. இந்த படத்துக்கும் இவங்க character க்கும் இன்னும் நிறைய fans இருக்காங்க. Kavan, Power pandi, Junga, Vanam kottatum, Kombu vaicha singamada கடைசியா ’லியோ’ படங்கள் மூலமா தமிழ் industry ல கலக்கிட்டு இருக்காங்க.

அதுமட்டுமில்ல கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகள்லயும் நடிச்சுட்டு வராங்க. But என்னதான் இருந்தாலும் நடிக்கிறத விட எனக்கு Singing-ல தான் interest இருக்குனு சொல்லிருக்காங்க. இதுல Highlight ஆனா விஷயம் என்னனா இதுவரைக்கும் எந்த கிசு கிசு-லயும் சிக்காம வலம் வந்துட்டு இருக்காங்க. Acting மாதிரியே Singing-லயும் ஒரு மிக பெரிய ஆளா வரனும்னு Suryan FM-ன் வாழ்த்துக்கள்.

Article by Saranya

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.