ஜெயம் ரவி நடித்துள்ள 25-வது படமான பூமி திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், இப்படம் பொங்கலுக்கு OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் தன் ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை ஜெயம் ரவி எழுதியுள்ளார். அக்கடிதத்தில் ” கோவிட்-19 காலத்தில் வெளியாகும் படங்களின் வரிசையில் இப்படமும் இணைந்துள்ளது. உங்களுடன் இணைந்து திரையரங்கில் இப்படத்தை ரசிக்க நினைத்தேன். ஆனால் காலம் வேறு ஒரு திட்டம் வைத்துள்ளது. ” என குறிப்பிட்டு, பூமி படத்தின் OTT ரிலீஸை பற்றிய Update-ஐ அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி ” இந்த பொங்கல் பண்டிகை தினத்தில் எனது அழகான திரைப்படத்துடன் உங்கள் வீட்டில் உங்களை சந்திப்பதை ஆசிர்வாதமாக கருதுகிறேன் ” எனவும் குறிப்பிட்டுள்ளார். பூமி படக்குழுவின் இந்த முடிவை ஜெயம் ரவி ரசிகர்கள் புரிந்து கொண்டு படக்குழுவினருக்கு ஆதரவாய் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஜெயம் ரவி போன்ற ஒரு திறமையான நடிகரின் 25-வது படத்தை திரையில் காண முடியவில்லை என்ற சோகம் ரசிகர்களுக்கு இருந்தாலும், தற்போதைய சூழலில் ஜெயம் ரவியின் இந்த முடிவை மறுக்காமல் ஏற்பதே அழகு என்பதை ரசிகர்கள் உணர்ந்துள்ளனர்.
ஜெயம் ரவி நடிப்பில், லக்ஷ்மன் இயக்கத்தில், டி.இமான் இசையில் இந்த பொங்கல் ரசிகர்களுக்கு பூமி பொங்கலாய் அமையவுள்ளது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.