Cinema News Stories

தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி…!

உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா… ஆமாங்க உயிரையும் கொடுப்போம் என்ற அளவுக்கு எப்படி இவ்வளவு ரசிகர்கள் இவருக்கு தமிழ் நாட்டுல மட்டுமில்லாம உலகம் முழுவதும்! சினிமா துறையில தனக்கான ஒரு இடத்தை பிடிக்கிறது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்ல. ஆனா இவர் வாழ்க்கையில எப்படி இது சாத்தியம்.

10 வயதில், வெற்றி (1984) திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் இளையதளபதி. 1996-ல் பூவே உனக்காக படத்தின் மூலம் தான் பெரும்பாலான தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்தில் தனக்கான ஓர் இடம்பிடித்தார் இளையதளபதி.

அதன் பிறகு காலமெல்லாம் காத்திருப்பேன், லவ் டுடே, நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும், நிலாவே வா, மின்சார கண்ணா என அடுத்தடுத்த படங்களில் வெற்றிக்கொடியை நாட்டினார். காதல் படங்களான குஷி, பிரியமானவளே பெருமளவு பேசப்பட்டு அனைத்து தரப்பிலும் விஜய்க்கு ரசிகர்கள் உருவாகினர்.

இதன் மூலம் விஜய் படங்களுக்கு வணிக ரீதியாக தனி மார்க்கெட்டும் உருவானது. வில்லன் கதாபாத்திரத்துக்கு பெயர் பெற்ற M.N. நம்பியார், P . S . வீரப்பன், S .A அசோகன், ரகுவரன் வரிசையில் உள்ளவர் தான் பிரகாஷ் ராஜ். ஈடு இணையற்ற வில்லன் என்று சொல்லலாம். இவர் விஜயுடன் வில்லனாக இணைந்து தமிழ் சினிமா வரலாற்றிலேயே மாபெரும் வெற்றி படமாக வலம் வந்ததுதான் கில்லி. இதில் வரும் பஞ்ச் டயலாக் இப்பொழுதும் அனல் பறக்கும்.

கில்லியைத் தொடர்ந்து வணிக ரீதியாக வெற்றிபெற்ற படங்களான மதுர, திருப்பாச்சி, சிவகாசி ,போக்கிரி ஆகிய படங்கள் இளைய தளபதி கேரியரில் அதிக வசூல் செய்த படங்கள். 2007 ஆம் ஆண்டு நானே ஹீரோ, நானே வில்லன் என்று அழகிய தமிழ் மகன் என்ற காதல் திரில்லர் திரைப்படத்தில் விஜய் நடித்தார்.

அது அவருக்கு பெரிதும் கை கொடுக்கவில்லை என்றாலும் வேட்டைக்காரன், நண்பன், துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், சர்கார் போன்ற படங்களில் ஸ்டைலிஷான ஆக்ஷன் ஹீரோவாக நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இதில் மாஸ்டர், பீஸ்ட் திரைப்படங்களும் அடங்கும்.

இப்படி இவர் நடிப்பு ஒரு பக்கம் இருக்க. நடனம், பாடல் இதிலும் விஜய்க்கு ரசிகர்கள் உண்டு. வாரிசு படத்தில் இவர் பாடிய “ரஞ்சிதமே” பாடல் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 2007-ல் திரையுலகில் தனது சாதனைகளை கவுரவிக்கும் வகையில் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து விஜய்க்கு கவுரவ டாக்டர் பட்டமும், மெர்சல் படத்திற்காக ஐக்கிய இராச்சியத்தில் விஜய்க்கு ‘2018-ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச நடிகர்’ விருதும் வழங்கப்பட்டது. இப்படியான பன்முகக் கலைஞர் தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

All Arealayum, Aiya Ghilli Da!

RJ Maya, Salem.

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.