Cinema News Stories

இ(ந்த)மான் இசை மான்!

Rhythm Imman concert Pondicherry

90’s ஸ் கிட்ஸ் கிட்ட உங்க பால்ய காலத்த பத்தி சொல்லுங்கன்னு சொன்னா… அவங்க உடனே அப்ப டிவில வந்த சீரியல்களோட டைட்டில் SONGS-அ பாடுவாங்க. அந்த அளவுக்கு அப்ப வந்த டைட்டில் SONGS ரொம்ப பிரபலம்.

அப்படி பிரபலமானதுக்கு தனித்துவமான காரணம் அதோட இசை. மக்கள் மனதில் நீங்காத நம்ம Memories-அ திருப்பி கொண்டுவர தனித்துவமான இசையை தந்தவர் D.இமான். இசை மான்னு கூட இவரை சொல்லலாம். காரணம் மான் எப்படி வேகமா ஓடுமோ அதே மாதிரி கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி எல்லா பந்தையும் சிக்ஸர் ஆக்கி வேகமா தமிழ் சினிமால ஓடுறவர்தான் D.இமான்.

தமிழன் படம் மூலமா நம்ம தமிழ் இசை ரசிகர்களுக்கு கிடைத்த இசைத் தமிழன். முதல் படத்துலேயே அப்போதைய உலக அழகி பிரியங்கா சோப்ராவ தன்னோட இசைல பாட வச்சவரு. அதுக்கப்புறம் விசில், கிரி, திருவிளையாடல் ஆரம்பம், கச்சேரி ஆரம்பம்னு இவரோட தனித்துவமான இசைனால இவர் கச்சேரி சினிமா இண்டஸ்ட்ரில கலை கட்ட ஆரம்பிச்சுது.

பயங்கர ஆர்பாட்டமாத்தான் இருக்கும்போல இவரோட இசைன்னு எல்லோரும் யோசிச்சுட்டு இருந்தப்ப, மைனா படம் மூலமா செம்ம Breezy-அ வேற லெவல் இசையை குடுத்து எல்லாரையும் மெய் மறக்க செஞ்சாரு. அதுக்கப்புறம் இவர் இசையமைச்ச ஒவ்வொரு படமும் தனி கவனத்த ஈர்த்துச்சு. இவர் இசையமைச்ச சில படங்கள் பெயர் கூட ஞாபகம் இருக்காது. ஆனா அந்த தாளமும் ரிதமும் எப்பவும் தலைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கும்.

ஒரு முறை இமான் அவர்கள் கிட்ட எந்த மாதிரியான இசை அமைக்கிறது கஷ்டம்னு கேட்டப்ப அவரு எமோஷனல் பாண்டிங் ஆன இசைதான் கஷ்டம், ஒரு உறவோட வலிமைய சொல்ற மாதிரி அமைக்கக் கூடிய இசை தான் எனக்கு பயங்கர Challenging-அ இருந்துருக்குனு சொல்லிருப்பாரு. ஆனா அப்படி சவாலா எடுத்துக்கிட்டு இவரு போட்ட மியூசிக் தான் ஒரு தனி இடத்த இவரு இசைக்கு வாங்கி குடுத்துருக்கு.

குறிப்பா “உன் கூடவே பொறக்கணும்”, “கண்ணான கண்ணே” பாடல்களோட இசைல அந்த உறவின் ஆழமும் வலியும் அவ்வளவு அழகா வெளிப்பட்டுருக்கும். அதனாலதான் என்னைக்கு அந்த பாட்ட கேட்டாலும் நம்ம கண்ணுல இருந்து தண்ணி வரும். நிறைவா மக்கள் மனம் நிறைஞ்சு போற அளவுக்கு இசையை அள்ளித் தரும். தேசிய விருது பெற்ற இசை நாயகனுக்கு சூரியன் பண்பலையின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Article by RJ Dharshini