Cinema News Stories

அன்றும் இன்றும் என்றும் ‘கெளதம்’

ஒவ்வொரு இயக்குனருக்கும் தனி சிறப்பு உண்டு. அது போல் தான் இவருக்கும். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலத்தில் 25 பிப்ரவரி 1973 ஆம் ஆண்டு பிறந்தவர் கெளதம் வாசுதேவன். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்ற வாசகம் இவருக்கு மிக பொருத்தமாக இருக்கும்.

2001 ஆம் வருடம் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்,பெண்களின் கனவுக் கண்ணன் மாதவன் நடிப்பில் கெளதம் இயக்கிய அழகான முதல் படம் மின்னலே. இந்த படத்தில் வரும் காட்சிகளும், பாடல்களும், படத்தின் பின்னணி இசையும் ரசிகர்கள் மனதில் அழியா கோலமாய் வண்ணங்கள் தீட்டிக் கொண்டிருக்கிறது இன்றும் என்றும்…

ஒரு காதல் திரைப்படத்தை வெற்றிகரமாய் கொடுத்து விட்டு, ரசிகர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு, ஒரு வருடம் இடைவெளிக்கு பிறகு 2003 வருடம் இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ’காக்க காக்க’. சமூக விரோதிகளுக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் நடக்கும் சண்டையை தத்ரூபமாய் காட்டியிருப்பார். அதன் பிறகு வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா என பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்.

கெளதம் சிறந்த இயக்குனர் மட்டுமல்ல சிறந்த நடிகரும் கூட. என்னை அறிந்தால் படத்தில், காக்க காக்க, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். சமீபத்தில் லியோ திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது.

Best Gautham Menon movies

இவர் இயக்கத்தில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். காத்திருப்போம் துருவ நட்சத்திரம் படத்திற்காக படத்தின் வெற்றிக்காக… இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து பல நல்ல படங்கள் மற்றும் கதாபாத்திரங்களுடன் இயக்குனர் கெளதம் வாசுதேவன் நம்மை ரசிக்க வைக்க வேண்டும். கெளதமுக்கு சூரியன் FM சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Article By RJ Sathesh