பிரேம்ஜி படத்துல இருக்காரா? அப்போ கண்டிப்பா சிங்கிள்ஸ்-க்கு பொருந்துற மாதிரி நிறைய சீன்ஸ் இருக்கும் அப்படிங்கறது சிங்கிள்ஸ் ஓட பரஸ்பர கருத்து. இவரு என்னதா நான் ஒரு சிங்கள்-ங்கனு சொன்னாலும் Girls-க்கு மத்தியில என்னைக்குமே இவருக்கு ஒரு தனி Fan Base இருக்கு.
கணேஷ்குமார் கங்கை அமரனுக்கு சின்ன வயசுல இருந்தே இசை மேல அவ்ளோ பிரியம். கணேஷ்குமாரா? அப்டினு யோசிக்கிறீங்களா! அட நம்ப பிரேம்ஜியோட உண்மையான பெயர் கணேஷ்குமார் தான். அவரோடா மேடை பெயர் தான் நம்ப எல்லாருக்கும் தெரிஞ்ச பிரேம்ஜி. இசை மேல இருக்க பிரியத்தால லண்டனுக்கு போய் படிச்சிட்டு வந்திருக்காரு. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் முதல் படத்துல இருந்தே அவரோட உதவியாளரா இருக்காரு.
இவரோட குடும்பமே திரைத்துறையில் இருக்காங்க. இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன், இயக்குனர் வெங்கட் பிரபு, இசைஞானி இளையராஜா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பாடகி பவதாரணி.
ஆனா பிரேம்ஜி-அ ஒரு நடிகரா, காமெடியனா தான இங்க பல பேருக்கு தெரியும். அவரு எப்படி நடிப்புக்குள்ள வந்தாரு அப்டிங்கறதே ஒரு சுவாரசியமான கதை.
ஒரு முறை இவருடைய அண்ணன் வெங்கட் பிரபு படம் எடுத்துட்டு இருந்தப்போ ஷூட்டிங் வாடான்னு கூப்பிட்டு இருக்காரு. சரி ஜாலியா போயிட்டு வரலாம்னு நினைச்சிட்டு வந்தவர ஜாலியா நடிச்சிட்டு போடானு சொல்லிட்டாராம். அப்படி ஜாலியா நடிச்ச படம் தான் “சென்னை 28”. அன்று முதல் இன்று வரை நடிப்ப ரசிச்சி ஜாலியா பல படங்கள் பண்ணிட்டு இருக்காரு. இதுமட்டும் இல்ல… இவர பாடலாசிரியர், பாடகர்னு சொல்லிட்டே போலாம்.
இப்போ எல்லாம் நிறைய கான்சர்ட்ஸ்லயும் இவர பாக்க முடியுது. பார்வையாளர் வரிசைல இல்ல… பாடகரா, இவரோட குரலுக்கும் இசைக்கும் கூட இப்போ நிறைய Fans இருக்காங்கங்கறது சந்தோஷமான ஒரு விஷயம். “என்ன கொடும சார்?”னு இவரு சீரியஸா படத்துல சொல்லியிருந்தாலும், இன்னைக்கு வரைக்கும் பல காமெடியான தருணங்களில் இததான் பயன்படுத்திட்டு இருக்கோம்.
அப்படி சீரியஸான விஷயத்த கூட நகைச்சுவையா வெளிப்படுத்தி மக்கள சிரிக்க வைக்கற அந்த மனசு இருக்கே… இருங்க… இருங்க… சிங்கிள்ஸ்க்கெல்லாம் முன்னோடியா இருந்த பிரேம்ஜி ரிட்டையர்மெண்ட் வாங்கிட்டு லௌகிக வாழ்க்கைல இணைய போறாரு. அட காதல் மாசத்துல பொறந்துட்டு காதல் பண்ணமாட்டேனு சொன்னா எப்படிங்க?
இதுவரைக்கும் சிங்கிள்ஸ்க்கு வழிகாட்டியா இருந்த இவரு, இனி Committed பக்கமே என்னைக்கும் இருப்பாருனு பல பேரால எதிர்பார்க்கப்படுது. “எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா?”னு எல்லா விஷயங்களையும் அசால்ட்டாவும், சூப்பராவும் பண்ணிட்டு இருக்க நம்ம பிரேம்ஜி-க்கு சூரியன் FM-இன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.