Cinema News Stories

கோயம்புத்தூர் சிங்கக்குட்டி…!!

கோயம்புத்தூரை பிறப்பிடமாக கொண்ட இவர் தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு…. என்ற தாரக மந்திரத்தின் சொந்தக்காரர். நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல பரிமாணங்களை கொண்ட கோயம்பத்தூர் சிங்கக்குட்டி !!…ஹிப்ஹாப் தமிழா ஆதி…!!

இவரை பத்தின ஒரு சில விஷயங்கள இப்ப நா உங்களுக்கு சொல்ல போறன். ஹிப்ஹாப் தமிழா College படிக்கும் போதிலிருந்தே கவிதை எழுதுறது, Rap பாடுறதுனு கூடவே தமிழ் மேல கொண்ட நேசம் சுவசமாய் மாறி தமிழ் மீதும் அதிகம் ஆர்வம் காட்டி வந்துருக்காரு. College முடிச்ச பிறகு வீட்ல இருந்தே சொந்தமா பாட்டு எழுதி அத RAP மூலமா யூடியூப்-ல ஹிப்ஹாப் தமிழன்’ என்ற பெயரில் பதிவு செஞ்சுட்டு வந்துருக்காரு.

அந்த நேரத்துல ஆர்க்குட் மூலமா சென்னையைச் சேர்ந்த ஜீவாவுடன் நட்பு ஏற்பட்டு ரெண்டு பேருமே இசையில் ஆர்வம் காட்டி வந்துருக்காங்க. ஐஞ்சு வருஷம் தீவிரமாக இசையில் இறங்கி, தங்களுடைய பாடல்களை யூடியூபில் பதிவேற்றி வந்துருக்காங்க… அதன்பிறகு தன் சொந்த Rap பாடல்களைக் கல்லூரி நிகழ்ச்சிகளிலும், நிறுவன நிகழ்ச்சிகளிலும் மேடை ஏற்றி தனக்கான ஓர் இடத்தை பிடிக்க தோல்வியோடு போட்டி போட்டு போராடி வந்த இவரை ஒரு நாள் வெற்றி தழுவியது.

ஹிப்ஹாப் தமிழன் ஆல்பத்தை ஜீவாவும் ஆதியும் தயாரிக்க, THINK MUSIC COMPANY அதை வெளியிட. யூடியூபில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆல்பத்தை Follow பண்ண ‘ஹிப்ஹாப் தமிழன்’ என்ற இவரது Album பிரபலமானது. பிறகு தற்செயலாக அனிருத்தை ஆதி சந்திக்க, ஹிப்ஹாப் கலைஞராக தமிழ் திரையுலகில் ‘வணக்கம் சென்னை’ படத்தின் ‘சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்’ பாட்டு மூலம் அறிமுகமானார்.

பிறகு சுந்தர். சி ஆம்பள திரைப்படத்தில் இசையமைப்பாளராக முதல் வாய்ப்பு கொடுத்தார். அதைத் தொடர்ந்து கதகளி, அரண்மனை 2, இன்று நேற்று நாளை, நட்பே துணை, கலகலப்பு 2, இமைக்கா நொடிகள், தனி ஒருவன் என பல படங்களுக்கு இசையமைத்தார். அதிலும் தனி ஒருவன் படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களின் மனதில் ஹிப்ஹாப் தமிழா பெயரை பதியச் செய்தது.

தன் வாழ்க்கையையே படமாக எடுத்தார். அது தான், மீசைய முறுக்கு திரைப்படம். இந்த படத்தின் வழியாக இயக்குநராகவும், கதாநாயகனாகவும் களமிறங்கி புது சரித்திரம் படைத்தார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இந்த படம் பெருமளவு ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இந்த விஷயத்த சொல்ல மறந்துட்டேன் பாருங்க….. இந்தியாவை உலகமே திரும்பி பார்க்க வைத்த ஒரு விஷயம் என்றால் அது ஜல்லிக்கட்டு போராட்டம் என்று சொல்லலாம்.

அப்படி ஒரு புரட்சிக்கு முதல் குரல் கொடுத்த ஒரு பெருமை இவரையே சேரும். இப்பொழுது வரை பல மேடைகளில் ரசிகர்களால் கேட்கப்படும் ஒரே கேள்வி…? தனி ஒருவன், இன்று நேற்று நாளை படத்துல வர பாடல்கள் மாதிரி எப்போ மறுபடியும் இசையமைப்பிங்க என்ற கேள்வி தான். இப்படி பல கேள்விகளையும், விமர்சனங்களையும் எதிர் கொண்டு, வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதி அவர்களுக்கு SURYAN FM சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்…!!!

Article By RJ Maya