Cinema News Stories

லாலேட்டன்னும் லட்ச ரசிகர்களும்!

Mohanlal from the sets of Odiyan

எந்த மொழி மலையாளம், எந்த நாடு கேரளம்னு இல்லாம கேரளத்துல பிறந்த இவர் பான் இந்தியா level-க்கு famous ஆனா நடிகர் தான். தமிழ்நாடுல எப்படி நம்ம superstar-ஓ அதே மாதிரி தான் கேரளத்துல நம்ம லாலேட்டன். அட நம்ம மோகன்லால் தாங்க, இவருக்கு மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம்னு தெரியாத மொழிகள் கிடையாது. அவரோட படங்கள்ல அவரு ஆக்ரோஷமா இல்லாம நம்ம வீட்ல இருந்து ஒருத்தர் நடிக்க போயிருந்தா எப்டி இருக்குமோ அப்டி இருக்கும்னு தான் சொல்லணும்.

அவரு 1980ல “மஞ்சில் விரிஞ்ச பூக்கள்” படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகமாகி இப்போ வரைக்கும் கலக்கிட்டு இருக்காரு, மலையாளத்துல ஏகப்பட்ட படங்கள் வந்திருந்தாலும் அந்த industry-அ ரெண்டு நடிகர்கள் தான் கைக்குள்ள போட்டு இருக்காங்க. ஒன்னு நம்ம “மோகன்லால்” இன்னொன்னு “மம்மூட்டி”. எப்படி நம்ம தமிழ் சினிமா-கு “ரஜினி கமல்”னு ரெண்டு சகாப்தங்கள் இருக்கோ அதே மாதிரி மலையாளம்-ல இவங்க ரெண்டு பேரு.

மோகன்லால் பத்தி சொல்லணும்-நா dedicated நடிகர்ங்க, கதைக்காக நிறைய ஒர்க் பண்றவர் தான் இவரு, இவரு பல படங்கள் நடிச்சிருக்காரு. எல்லாமே ஹிட். கேரளத்துல அசைக்க முடியாத ஒரு நடிகரா உருவாகி இன்னைக்கு வரைக்கும் அப்டியே இருக்காரு. இவரோட முதல் படம் 1980-ல வெளியானுச்சு அவரோட 100வது படம் 1986-லயே வந்துருச்சு. “நின்னஷ்டம் என்னிஷ்டம்” அப்டின்ற படம் அவருக்கு 100வது படமா அமஞ்சிது. அது மட்டும் இல்ல எப்படி 100 படம் நடிக்க ரொம்ப காலம் எடுத்துக்கலயோ அதே மாதிரி 200 பாம் நடிக்கவும் ரொம்ப காலம் எடுத்துக்கல.

1993-ல அவரு தன்னோட 200 வது படத்துல நடிச்சிருந்தாரு. அது தான் “கந்தர்வம்”. 1997 ல அவரு தன்னோட முதல் வெளி மொழி படத்துல நடிச்சாரு. அது மூலமா நம்ம தமிழ் ரசிகர்கள் அவருக்கு fan ah மாறினாங்க. அது தான் நம்ம இயக்குனர் மணிரத்னம் இயக்கத்துல வந்த “Iruvar” திரைப்படம், நம்ம பிரகாஷ்ராஜ் கூட நடிச்சி பட்டய கெளப்பிருப்பாரு நம்ம லாலேட்டன்.

அந்த படம் மூலமா அவருக்கு தமிழ்நாடுல நிறைய fans வர ஆரம்பிச்சாங்க, அதுக்கப்பறம் அவருக்கு டிமாண்ட் அதிகம் ஆக ஆரம்பிச்சுது. அவரோட நடிப்புல 2016-ல வெளிவந்த “புலிமுருகன்” படம் மூலமா மலையாள Industry தன்னோட முதல் 150 கோடி ரூபாய் கலக்சன பதிவு பண்ணாங்க. இந்த படம் நம்ம மோகன்லால் ஓட சினிமா வாழ்க்கைலயே முக்கியமான படமா தான் இருந்துச்சு, அவருக்கு எப்படிப்பட்ட கேரக்டர் கொடுத்தாலும் பயங்கரமா performance பண்ணுவாரு. அப்படிப்பட்ட ஒரு நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Article By RJ Jae