Specials Stories

Happy World Turtle Day…!

ஆமைகள் ஒரு சுவாரஸ்யம் நிறைஞ்ச உயிரினம். நில ஆமைகள் உலகின் அதிக ஆயுட்காலம் கொண்ட விலங்கினம். இதுல சில ஆமைகள் 150 வயது வரை வாழ்பவையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக China போன்ற நாடுகளில் இவை ஆயுளைக் குறிக்கும் சின்னமாகக் கருதப்படுகிறது.

இதுவரை பதிவு செய்யப்பட்டவைகளில் மிகப் பழமையான ஆமை எது தெரியுமா? மலிலா என்ற நில ஆமை, 1777ஆம் ஆண்டு அந்த ஆமை பிறந்தவுடன் JAMES COK என்ற பயணி ஒருவரால் அரச குடும்பத்திற்கு பரிசாக வழங்கப்பட்டது. அந்த ஆமை மே 19, 1965 ஆம் ஆண்டு தன் 188 வயதில் இயற்கைக் காரணங்களால் உயிரிழந்தது.

பெரும்பாலான நில ஆமை இனங்கள் 1 முதல் 2 முட்டைகள் வரை மட்டுமே இடுகிறது. எனினும் சில ஆமை இனங்கள் 20 முட்டைகளுக்கும் மேல் இடுகின்றது. பெரும்பாலான இனங்கள் நீண்ட காலம் முட்டைகளை அடை காக்கின்றது. அவற்றின் சராசரியான அடை காக்கும் காலம் 100 முதல் 160 நாட்கள் வரை இருக்கும்.

இரவுப் பொழுதில் முட்டையிட்ட பிறகு பெண் ஆமைகள் அவற்றை மணல், மண் மற்றும் கரிமப் பொருள் ஆகியவற்றைக் கொண்டு மூடிவிடுகின்றன. முட்டைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், அதன் இனத்தைப் பொறுத்து, குஞ்சு பொரிக்க 60 முதல் 120 நாட்கள் வரை ஆகும்.

அடை காக்கும் காலம் முடிவுற்ற பிறகு முழுமையாக வளர்ச்சியடைந்த ஆமைக்குஞ்சுகள் தங்கள் பற்களை பயன்படுத்தி முட்டையை உடைத்துக் கொண்டு வெளிவரும். பிறகு அவை தனியாக வாழப் பழகத் தொடங்கும். தனக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறுவதற்காக புழுக்கள் மட்டும் பூச்சி குடம்பிகள் ஆகியவற்றை உண்கின்றன.

ஆனா இப்போ நிறைய ஆமை இனங்கள் அழிஞ்சிட்டு வருது. நாமதான் அதை பாதுகாக்கணும். இயற்கைக்காக தான் நாமளே தவிர நமக்காக இயற்கை இல்லை. சில்லுக்கருப்பட்டி போல சில படங்கள்ல இத ரொம்ப அழகா சித்தரிச்சு இருப்பாங்க. ஆமைகள் கிட்ட கத்துக்க நிறைய விஷயம் இருந்தாலும், மத்தவங்க கிட்ட இருந்து தன்னை பாதுகாத்துக்க தன்கிட்டயே ஆயுதம் இருக்குன்றதையும், அதனுடைய பொறுமையையும் மனுஷங்க நாம கண்டிப்பா கத்துக்கனும்..!

Article By RJ Meenu