Cinema News Stories

நடிப்பின் நாயகன் கார்த்தி

சினிமா பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்த கார்த்தி, இயக்குனர் ஆவதை லட்சியமாகக் கொண்டிருந்தாலும் கதாநாயகனாக அறிமுகமாகி நடிப்பின் நாயகனாக தன்னை நிலை நாட்டிய படம் தான் பருத்திவீரன். அறிமுக படத்திலேயே அமோகமான வரவேற்பு நடிகர் கார்த்திக்கு கிடைத்தது.

எந்த ஒரு நடிகரின் சாயலையும் பின்பற்றாமல் கமர்சியல் , காமெடி படங்களில் நடித்து தமிழ் மக்களின் மனதில் முன்னணி கதாநாயனாக இடம் பிடித்தார். தன்னுடைய முதல் படமான “பருத்திவீரன்” படம், தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாகிப் போக, அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தார்.

அதுமட்டுமில்லாமல் தமிழக அரசின் சிறப்பு விருதும் இப்படத்திற்கு கிடைத்தது. அதைத்தொடர்ந்து “பையா” வில் handsome ஹீரோவாகவும், “தீரன் அதிகாரன் ஒன்று” தமிழ் சினிமாவின் முக்கியமான க்ரைம் கில்லர் படத்தில் action ஹீரோவாகவும் நடித்து சீரான வேகத்தில் தமிழ் சினிமாவில் பயணித்தார்.

இடையிடையே சில சறுக்கல்களை சந்தித்த போதிலும் அதை பெரிது படுத்தாமல் மீண்டும் படங்களில் தன்னுடைய கடின உழைப்பையும், மெருகேற்றத்தையும் கொடுத்துக் கொண்டே இருந்தார் கார்த்தி. அறிமுக இயக்குனர்களை நம்பி , தன் முழு நடிப்பு திறமையும் காட்டிய முன்னணி நடிகர் தான் கார்த்தி.

சிறுத்தை படத்தில் இரு வேடங்களில் மிக கன கச்சிதமாக தன் நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் , தன்னுடைய நடிப்பு திறனை சினிமாவில் பதிய வைத்தார். “நான் மகான் அல்ல”, “மாநகரம்”, “மெட்ராஸ்”, போன்ற அரசியல் கலந்த டார்க் கதைக்களங்களிலும் கலக்கியவர் தான் கார்த்தி.

அதேபோல் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் “கடைக்குட்டி சிங்கம்” போன்ற படங்களிலும் கார்த்தி நடிக்க தவறியதில்லை. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தத்துரூபமாக நடிக்க தவறாத கார்த்தியின், நடிப்பு திறமையை மேலும் வெளிக்காட்ட கிடைத்த கதாபாத்திரம் தான் பொன்னியின் செல்வன்.

இதில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை அற்புதமாக செய்திருப்பார். வரலாற்று காவியமான பொன்னியின் செல்வனில், தன்னுடைய கதாபாத்திரத்திற்கு வேறு யாரும் சரியாகப் பொருந்தி விட முடியாது என்று என்னும் அளவிற்கு தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இதே போல் அடுத்து அடுத்தும் நடிகர் கார்த்தியின் பட தேர்வுகள் சிறப்பாக அமைந்து வெற்றிகள் காண பிறந்தநாளான இன்று வாழ்த்தி மகிழ்கிறது சூரியன் பண்பலை.

Article by Vigithra.K