Cinema News Stories

1 Year of ‘தீராக் காதல்’

இந்த படத்தோட TITLE-க்கு ஏத்த மாதிரி ஒரு தீராத காதலர்களோட, SORRY… காதலியோட கதை. ஒரு அம்மா அப்பா குழந்தை னு CUTE ஆன குட்டி FAMILY தான் நம்ம ஹீரோ JAI ஓடது. ஹீரோயின் SHIVADA என்னதான் OFFICE போற WIFE-ஆ இருந்தாலும் குடும்பத்துல இருக்க குழந்தை மேலயும் HUSBAND மேலயும் நிறைய பாசமா இருக்க அன்பான அமைதியான மனைவி.

இப்டி ஒரு அழகான FAMILY இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சி முடிக்கிறதுக்குள்ள Rugged husband-ஆ Amzath khan வராரு. ஐஸ்வர்யா ராஜேஷ் தான் Amzath ஓட மனைவி. இப்படிப்பட்டவங்களோட வாழ முடியாதுனு ஐஸ்வர்யா ராஜேஷ் முடிவெடுக்கறப்ப அவங்க அம்மா அப்பா என்னம்மா இப்படி பண்றியேமானு Advise பண்ண Start பண்றாங்க.

உடனே தப்பிச்சி வெளி ஊர் போலாம்னு முடிவு பண்ணி கிளம்புறாங்க. இன்னொரு Side நம்ம ஹீரோக்கு திடீர்னு வேலை விஷயமா வெளியூர் போக வேண்டிய வேலை இருக்கு. அப்படி போறப்ப TRAIN-அ காமிச்சிட்டு அப்டியே அடுத்த CUT-ல ஐஸ்வர்யா ராஜேஷ்-ஐயும் காமிக்கிறாங்க. அதே Train-ல.

Twist என்னனா Jai-ம் ஐஸ்வர்யா ராஜேஷும் முன்னாள் காதலர்கள். யதார்த்தமா 2 பேரும் Meet பண்ண, மங்களூர்ல நிறைய Time spend பண்ணி பழைய காதல் திரும்ப உள்ள வரதுக்கு முன்னாடியே, இனிமேல் 2 பேரும் பாக்க வேணாம்னு முடிவு பண்ணி சென்னைக்கு வந்து BACK TO NORMAL ஆகுறாங்க.

ஆனா ஐஸ்வர்யாவால ஜெய்-ய மறக்க முடியாம பழைய காதல் திரும்ப கிடைக்கும்-ன்ற நம்பிக்கைல அவங்க APPARTMENT லயே வந்து தங்குறாங்க. ஜெய் இதனால DISTURB ஆகி திரும்ப போக சொல்றாரு. ஆனா அவங்க பிடிவாதமா அங்கேயே இருக்காங்க. இந்த கேப்ல ஜெய் ஓட WIFE 2வது குழந்தைக்கு PREGNANT ஆகுறாங்க.

எல்லாரும் செம சந்தோசமா இருக்கப்ப, ஐஸ்வர்யா ஒரு நாள் ROAD-ல ஜெய்-அ HUG பண்ணிடுவாங்க. அத கரெக்ட்-ஆ ஜெய் ஓட WIFE பாத்துருவாங்க. ஜெய் இத பத்தி எவ்ளவோ பேச TRY பண்றப்பவும் அத அவங்க கேக்காம அவங்க அம்மா வீட்டுக்கு போய்டுவாங்க.

அவங்க பாப்பா ALREADY அப்பா பொண்ணு, அதனால அந்த பாப்பா அவங்க அப்பாவ ரொம்ப மிஸ் பண்ணி அவங்க அப்பாவ தேடி அவங்க ஆபீஸ்க்கு தப்பான அட்ரஸ்க்கு போயிருவாங்க. எல்லாரும் தேடிட்டு இருக்கப்ப ஐஸ்வர்யா ராஜேஷ் கண்ணுல அந்த பாப்பா பட்டுருவாங்க .

அவங்க கிட்ட பேசறப்ப தான் புரியும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு… ஒரு நல்ல FAMILY-அ நாம தேவையில்லாம DISTURB பண்ணிட்டோம்னு. டைரக்டர் ரோகின் வெங்கடேசன் லவ் அப்படின்ற விஷயத்த ரொம்ப அழகா DIFFERNTIATE பண்ணிருப்பாங்க. சித்து குமார் MUSIC ஒரு ஒரு SITUATION-க்கும் அதிகமான FEEL குடுக்கும்.

வேணாம்னு தூக்கி போடற பல காதல் இப்போ வரைக்கும் பல பேரோட மனசுல தீரா காதலா இருந்தாலும் சில இடங்களில் கற்பனையில் இருந்தால் மட்டுமே காதலுக்கும் மதிப்பு இருக்கும். அதுக்கு தீரா காதல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. MAY 26 2023 ல வெளி வந்த இந்த படம் இந்த ஒரு வருஷம் மட்டும் இல்லாம எல்லா வருசமும் காதலை நியாபகப்படுத்திகிட்டே தான் இருக்கும்.

WITH தீரா காதலுடன் – ARTICLE BY RJ பிரியாள்