Cinema News Stories

“Rashmika என்கிற Crushmika”

Rashmika

ஒவ்வொரு காலகட்டத்துலயும் ஒரு நடிகை அந்தந்த சினிமாத்துறைல இருக்க ரசிகர்களுக்கு கனவுக் கன்னியா இருப்பாங்க, இது அந்த காலத்துலருந்து இப்ப வரை தொடர்ந்துட்டு தான் இருக்கு. அப்படி கன்னட சினிமால அறிமுகமாகி தென்னிந்திய சினிமால வலம் வந்து, இந்திய சினிமாவையே இப்ப கலக்கிட்டு இருக்க நடிகை தான் நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா.

இன்ஸ்டாகிராம்ல அதிக Followers உள்ள தென்னிந்திய நடிகை ராஷ்மிகா தான், ஏன்னா தென்னிந்திய நடிகைல இருந்து தன்னோட முயற்சியால, தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்ததால PAN INDIA நடிகை ஆகிட்டாங்க.

2017-ல கிரிக் பார்ட்டி படம் மூலமா திரைப்பயணத்த தொடங்கின ராஷ்மிகாக்கு மொத படத்துலயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருது கிடைச்சுது, அடுத்தடுத்து கன்னட சினிமால கவனம் செலுத்தின ராஷ்மிகா மேல மொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களோட கவனத்தையும் செலுத்த வச்சது விஜய் தேவரகொண்டா கூட ராஷ்மிகா நடிச்சு 2018-ல ரிலீஸ் ஆன கீதா கோவிந்தம் படம் தான். அந்த படத்துல ரெண்டு பேரும் ரியல் ஜோடி போல நடிச்சிருப்பாங்க.

தெலுங்கு சினிமாவான கீதா கோவிந்தம் மேல சினிமா ரசிகர்கள் எல்லாரோட கவனமும் போக காரணம், “இங்கேம் இங்கேம் இங்கேம் காவாலே” பாட்டு தான், இப்ப கூட இத படிச்சதும் ராஷ்மிகா நடந்து வர மாதிரி தோனியிருக்குமே? அதான் இன்னைக்கு ராஷ்மிகாவ எல்லாரும் Crush-னு சொல்ல ஆரம்பமே.

இதே ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா காம்போ ஒரு ஹிட் & ஃபரஷ் காம்போனு அடுத்து டியர் காம்ரேட் படத்துல மறுபடியும் ஒன்னா நடிச்சாங்க, ஆனா அந்த படம் எதிர்பார்த்த வரவேற்ப பெறல, புலராத காலை பாட்டு மட்டும் பட்டி தொட்டியெல்லாம் ஹிட். டியர் காம்ரேட் படத்த பாத்தவங்க மட்டும் கண்டிப்பா ராஷ்மிகா சினிமா பயணத்துல அது தான் அவங்க best-னு சொல்லுவாங்க.

தெலுங்கு, கன்னடம்னு படங்கள் நடிச்சிட்டு இருந்த ராஷ்மிகா, கார்த்தியோட சுல்தான் படம் மூலமா தமிழ் சினிமால கதாநாயகியா அறிமுகம் ஆகுறாங்க, இதுல ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னனா சுல்தான் படத்துல கார்த்தி இன்ட்ரோ சீனவிட ராஷ்மிகா வரும்போது மொத்த தியேட்டரும் விசில் சத்தத்துல தெறிக்க விட்டாங்க, ஏன்னா ராஷ்மிகா தான் ஏற்கனவே நம்ம பசங்களுக்கு crush ஆகிட்டாங்களே.

அடுத்து மகேஷ் பாபு கூட சரிலேரு நீக்குவேரு படம், சீதா ராமம்னு அடுத்தடுத்து ராஷ்மிகா நடிச்ச தெலுங்கு படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்.
பாலிவுட்ல யுவன் மியூசிக்ல, பாட்ஷா கூட ஒரு ஆல்பம் சாங் ’TOP TUCKER’ பேருக்கு ஏத்த மாதிரி பாட்டும் டாப் ஹிட்டு.

ராஷ்மிகாவ மொத்த இந்திய சினிமாவும் திரும்பி பார்த்தது 2021-ல PAN INDIA படமா ரிலீஸ் ஆன “புஷ்பா” ஒரு பக்கம் சந்தன மரக்கட்டை கடத்தல்னு கதை நகரும் போது மறுபக்கம் ஸ்ரீவள்ளியா வர ராஷ்மிகா கூட காதல்னு ரெண்டும் ரசிக்கும்படியா இருந்துச்சு. முக்கியமா புஷ்பா ஹிட்டுக்கு காரணம் தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்கள் தான், சாமி சாமி பாட்டுக்கு ராஷ்மிகா போட்ட டான்ஸ இப்ப வரை குட்டீஸ் கேட்டு ஆடிட்டுதான் இருக்காங்க.

புஷ்பா 2 ரிலீஸ்க்காக மொத்த இந்திய சினிமா ரசிகர்களும் காத்துட்டு இருக்காங்க. சுல்தான்க்கு அப்பறம் தளபதி விஜய்யோட தமிழ்ல வாரிசு படம் நடிக்குறாங்க… இந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட், இதுல ராஷ்மிகாக்கு ரெண்டு காமெடி சீன், நாலு லவ் சீன், மூணு பாட்டுனு ஒரு கமர்ஷியல் படமா தான் அமைஞ்சுது, ஆனா ராஷ்மிகா படம்னா பாட்டு சூப்பர் ஹிட்டாச்சே, அதே மாதிரி, ரஞ்சிதமே, ஜிமிக்கி பொண்ணுனு எல்லாம் இப்பவும் டிவி, ரேடியோனு டாப் ப்ளே லிஸ்ட்ல ஓடிட்டு இருக்கு.

ராஷ்மிகா 2023-ல பாலிவுட் சினிமால ரன்பீர் கபூர் கூட நடிச்ச அனிமல் படம் ஹிந்தி ரசிகர்கள் கிட்ட அதிக வரவேற்பையும், தென்னிந்திய சினிமா ரசிகர்கள்கிட்ட சில விவாதங்களையும் உருவாக்குச்சு. ஆனா படத்தோட மேக்கிங், பாட்டு, முக்கியமா ராஷ்மிகாவோட நடிப்ப பலரும் பாரட்டினாங்க.

ராஷ்மிகா மேல சிலர் சமூக வலைதளங்கள்ல கேலியான விமர்சனங்கள் வச்சாலும், அவங்க தனிப்பட்ட வாழ்க்கைய பத்தி பேசினாலும், எதையும் ரொம்ப தைரியமா எதிர்கொண்டு சிரிச்ச முகத்தோட தான் இருப்பாங்க. ராஷ்மிகா வெற்றிப் பயணத்துக்கு முக்கிய காரணம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தினு எந்த மொழியில நடிச்சாலும் அந்த மொழி ராஷ்மிகாக்கு தெரியும்.

படத்தோட ப்ரோமோஷன் போனா கூட அந்தந்த மாநில மொழில தான் ஒவ்வொரு நேர்காணல்லயும் பேசுவாங்க. ராஷ்மிகானு சொன்ன உடனே நியாபகம் வர சில விஷயங்கள்…

*நேஷ்னல் க்ரஷ்

*இங்கேம் இங்கேம் இங்கேம் காவாலே பாட்டு

*ரஞ்சிதமே

*ஸ்ரீவள்ளி கதாபாத்திரம்

*சாமி சாமி பாட்டோட டான்ஸ்

*சரிலேரு படத்துல வர Train dance sequence

இப்படி சொல்லிட்டே போலாம், இன்னைக்கு தன்னோட நடிப்பால, க்யூட் க்யூட் reactions-னால நேஷ்னல் க்ரஷ் ஆன ராஷ்மிகா, பல வெற்றிகள் கொடுத்து இந்திய சினிமாவ இன்னும் பல வருஷங்கள் தன்னோட கட்டுக்குள்ள வைக்க சூரியன் FM-ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Article By RJ SRINI

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.