Cinema News Stories

MAGICAL SINGER ’VIJAY PRAKASH’

இந்த உலகத்துல இசையை பிடிக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. எந்த ஒரு Situation வந்தாலும் யாரு நமக்கு துணை இருப்பாங்களோ, இல்லையோ கண்டிப்பா இசை இருக்கும். அப்படி இசையைப் பிடிச்சவங்களுக்கு இவரோட குரல பிடிக்காம இருக்கவே முடியாது.

Yes… Engineering Student-அ இருந்து இப்போ இசை உலகத்தையே கலக்கிட்டு இருக்க Playback Singer Vijay Prakash-தான் அது. தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தினு ஆயிரம் பாடல்கள் மட்டும் இல்லாம கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளம்பரத்துக்கு தன்னோட குரலையும் கொடுத்திருக்காரு.

நம்பவே முடியலல்ல. காலேஜ்ல படிக்கும்போதே மியூசிக் மேல இருக்க இன்ட்ரஸ்ட்ல Studies-அ Discontinue பண்ணிட்டு அவரோட இந்த சிங்கர் பயணத்த ஆரம்பிச்சார். 1997-ல இருந்து அட்வர்டைஸ்மெண்டுக்கு பேச ஆரம்பிச்சாரு, அப்புறம் ஒரு ரியாலிட்டி ஷோ ல Participate பண்ணி சிங்கரா, ஒரு Voice Over Artist-அ மட்டும் இல்லாம மியூசிக் கம்போசர் ஆனாரு.

2016-ல கர்நாடக அரசு சிறந்த பின்னணி பாடகர் விருது வாங்குறாரு, தொடர்ந்து அதுக்கப்புறம் இது மாதிரி எக்கச்சக்க அவார்டும் வாங்கிருக்காரு. அது மட்டும் இல்லாம மக்களால VP Sir-னு செல்லமா அழைக்கப்பட்டார். இவர் தன்னோட மேஜிக்கல் வாய்ஸால பெரிய பெரிய Music Directors-க்கு பாடி இந்த இசை உலகத்தையே கலக்கிட்டு இருக்கார்னே சொல்லலாம். மேஜிக்கல் வாய்ஸ் விஜய் பிரகாஷுக்கு சூரியன் FM-இன் பிறந்தநாள் வாழ்த்துகள்.

Article By RJ Sushma