Cinema News Stories

ஜகமே தந்திரம் trailer இதோ !!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தின் trailer தற்போது YouTube-இல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீஸர் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ஜேம்ஸ் காஸ்மோ, ஐஷ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த வெற்றிப் படமான கர்ணன் திரைப்படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தான் ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இருந்து வெளியான பாடல்களும் சூப்பர்ஹிட் பாடல்களாக வலம் வருகிறது. குறிப்பாக இப்படத்தின் ரக்கிட ரக்கிட பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் கொண்டாடப்படும் குத்து பாடலாக அமைந்துள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் டீஸர் ஐ வைத்து பார்க்கும் போது, மதுரை கார Gangster London ல் என்ன செய்கிறார் என்ற கதை களத்தோடு இப்படம் இருக்கக்கூடும் என தெரிகிறது. அனைத்து விதமான ரசிகர்களுக்கும் ஏற்ற படமாக ஜகமே தந்திரம் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜகமே தந்திரம் திரைப்படத்தின் trailer-ஐ கீழே காணுங்கள்.