Cinema News Stories

மீண்டும் உச்சத்தில் கமல்ஹாசன்?!

தமிழ் சினிமாவில் MGR சிவாஜிக்கு பிறகு நீண்ட காலமாக உச்சத்தில் இருப்பவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்.

கடந்த சில வருடங்களாக அரசியல், தொலைக்காட்சி நிகழ்ச்சி என படங்களை தாண்டி வெவ்வேறு தளங்களில் கமல்ஹாசன் கவனம் செலுத்தியதால் அவரால் சரிவர படங்களில் நடிக்க முடியாமல் போனது, வெளியான ஓரிரு படங்களும் தோல்வி அடைந்தது, பெரும் எதிர்பார்ப்போடு இயக்குனர் ஷங்கரோடு மீண்டும் இணைந்த இந்தியன் 2 படமும் சில காரணங்களால் பாதியில் நின்றது.

எனவே, கோலிவுட் வட்டாரத்தில் கமலின் சினிமா பயணம் முடியப் போகிறது என பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்தார், அப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல், இதுவரை வெளிவந்த கமலின் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக மாறியது.

விக்ரமின் வெற்றிக்குப் பிறகு, கமல்ஹாசனின் மார்க்கெட் மீண்டும் உச்சத்திற்கு சென்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் கமலும் வருடத்திற்கு ஒரு படம் கொடுத்து விட வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. பாதியில் நின்று போன இந்தியன் 2 மீண்டும் தொடங்கி படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்துவருகிறது. மேலும் மணிரத்னம் உடன் ஒரு படம், H .வினோத் உடன் ஒரு படம், Pan Wolrd படமாக உருவாகும் அமிதாப் பச்சன், பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் போன்றோருடன் இணைந்து கல்கி 2898 AD திரைப்படம் என வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.

Kamal Haasan

அதே சமயம் அவரது படங்களுக்கான வியாபாரமும் பல மடங்கு உயரந்துள்ளது, அடுத்து அவர் நடிப்பில் வெளிவர இருக்கும் இந்தியன் 2 படத்தின் அனைத்து மொழி OTT ஸ்ட்ரீமிங் உரிமைகளை நெட்ஃபிலிக்ஸ் 200 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அண்மையில், இந்தியன் 2 படத்தின் சில காட்சிகளை பார்த்த கமல்ஹாசனுக்கு படம் பிடித்துப் போக அவரும் மகிழிச்சியில் உள்ளாராம்.

மேலும் Satellite, தியேட்டர் என இந்தியன் 2 மிகப் பெரிய வியாபாரம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு கமலின் திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் வியாபாரமும் பல மடங்கு கூடியுள்ளது.

Article By Sathishkumar Manogaran