Cinema News Specials Stories

என்னது லியோ Audio Launch நடக்கலயா? என்ன ஆச்சு?

என்னது லியோ Audio Launch நடக்கலயா? என்ன ஆச்சு? ஏன்? இதாங்க இப்போ எல்லாரும் பேசிட்டுருக்க விஷயம். வாங்க என்ன காரணம்னு பாப்போம்.

விஜய் நடிப்புல, லோகேஷ் கனகராஜ் Direction-ல உருவாகியிருக்க லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீசாகுது. இதோட ஆடியோ லான்ச் செப்டம்பர் 30 ஆம் தேதி நடக்க இருந்துச்சு. இந்த இசை வெளியீட்டு விழாவ ரசிகர்கள் அத்தனை பேரும் அவ்வளவு ஆர்வமா எதிர்பார்த்து காத்திருந்தாங்க. அதுக்கு என்னென்ன காரணம்னு சொல்றன் கேளுங்க…

  1. சூப்பர் ஸ்டார் பட்டம் பத்தியும், தன்னோட அரசியல் எண்ட்ரி பத்தியும் தளதி விஜய் என்ன சொல்ல போறாருங்குறது இவ்வளவு பெரிய எதிர்பார்ப்புக்கு மிக முக்கிய காரணம்.
  2. விஜய்-லோகேஷ் கூட்டணில முழுக்க முழுக்க லோகேஷ் ஸ்டைல்ல உருவாகியிருக்க படம் இது.
  3. லியோ படம் LCU-ல ஒரு பகுதி. அது பத்தி தெரிஞ்சுக்க எல்லாரும் ரொம்ப ஆர்வமா இருந்தாங்க.
  4. விக்ரம் படத்தோட வெற்றியால… தளபதி விஜயோட படங்கள்லயே மிக மிக அதிக எதிர்பார்ப்பு கொண்ட படமா லியோ மாறியிருக்கு.
  5. இசை வெளியீட்டு விழால தளபதியோட குட்டி ஸ்டோரி, த்ரிஷா, மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், அனிருத் உள்ளிட்ட முக்கியமான நட்சத்திரங்களோட பேச்ச கேக்க ரசிகர்கள் ஆர்வமா இருந்தாங்க.

இதையெல்லாம் தாண்டி இன்னும் நிறைய ரசிகர்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு. ஆனா எதிர்பாராத விதமா படத்தயாரிப்பு நிறுவனம் இசை வெளியீட்டு விழா நடக்காது அப்டினு சொல்லியிருக்காங்க. இதுக்கு என்ன காரணம் அப்படின்னும் தயாரிப்பாளர் தரப்புல இருந்தே சொல்லியிருக்காங்க. லியோ இசை வெளியீட்டு விழா டிக்கெட் மாதிரி நிறைய போலியான டிக்கெட்டுகள் வித்துட்டு இருக்காங்கனு சொல்றாங்க.

சமீபத்துல சென்னைல நடந்த ஏ.ஆர்.ரஹ்மானோட மறக்குமா நெஞ்சம் Concert-லயும் இதே பிரச்னை தான் நடந்துச்சு. அது இந்திய அளவுல மிகப்பெரிய பிரச்னையா பேசப்பட்டுச்சு. அதே மாதிரி இன்னொரு சம்பவம் நடக்கக் கூடாது. அப்படினு தயாரிப்பாளர் தரப்புல இருந்து முடிவெடுத்து இசை வெளியீட்டு விழாவ ரத்து பண்ணியிருக்காங்க. இத ரசிகர்கள் பலராலயும் ஏத்துக்க முடியல. இது பத்தி நிறைய பேர் நிறைய விஷய்ங்கள சமூகவலைதளங்கள்ல பதிவு பண்ணிட்டு இருக்காங்க.

கேரளால, மலேசியால இல்ல North India-ல எங்கயாவது இசை வெளியீட்டு விழாவ நடத்தலாம். பீஸ்ட் படத்துக்கு பண்ண மாதிரி Interview எதாவது வந்தா நல்லாருக்கும். இதுல அரசியல் தலையீடு இருக்கு அப்டி இப்டினு பலரும் பல கருத்துகள முன் வச்சுட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம் #WeStandWithLeo Hashtag ட்ரெண்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.

ஏற்கனவே ஒரு விஜய் படத்தோட இசை வெளியீட்டு விழால கூட்டம் அதிகமாகி, நிறைய ரசிகர்கள் விழால கலந்துக்க முடியாம, போலீஸ் கிட்ட அடிபட்டு ரொம்ப பிரச்னை ஆச்சு. அதே மாதிரி இப்பவும் ஆகிடக் கூடாது, ரசிகர்களுக்கு எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாதுனு இந்த முடிவு எடுத்துருக்குறதா தயாரிப்பாளர் தரப்புல இருந்து உறுதியா சொல்லியிருக்காங்க.

அதனால படம் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிச்சுருக்கு. லியோ பத்தின அடுத்தடுத்த அப்டேட்ஸ் தொடர்ந்து வரப்போது அப்டின்னும் சொல்லிட்டு இருக்காங்க. ட்ரெய்லர் Expectation-ம் ரொம்பவே அதிகமாயிருக்கு. So இன்னும் ஒரு மாசம் Social Media-வ Leo ஆக்கிரமிக்கும் அப்படிங்குறதுல எந்த சந்தேகமும் இல்ல.

Article By MaNo