Cinema News Specials Stories

1 Year of ‘பொன்னியின் செல்வன்’

MGRல இருந்து கமல் வரைக்கும் பல பேர் கண்ட கனவு, தி OG மணிரத்னம்-னால தான் சாத்தியமாகி இருக்கு. பொன்னியின் செல்வன் என்னும் சகாப்தம் உருவாகி ஒரு வருஷம் ஆகுது.

மணிரத்னம் தன்னோட முதல் முயற்சியிலயே கமல்ஹாசனை வச்சு பொன்னியின் செல்வன் எடுக்க முயற்சி பண்ணி பட்ஜெட் பிரச்சனையால் கைவிடப்பட்டுச்சு. அதுக்கு பிறகு விஜய், மகேஷ் பாபு, விக்ரம் வெச்சு 2012-ல முயற்சி பண்ணி அதுவும் கைவிடப்பட்டுச்சு. கடைசில LYCA Productions மூலமா அது சாத்தியம் ஆச்சு.

இவ்ளோ பெரிய படத்த அதுவும் இரண்டு பாகம் படத்த 150 நாள்ல எடுக்க மணிரத்னமால மட்டும் தான் முடியும். பொன்னியின் செல்வன் வெளியீடு அப்போ அவ்ளோ விமர்சனம், மணிரத்னம் ராஜமௌலி மாறி எடுக்கல, பாகுபலி மாறி இல்ல அப்டின்னு… ஆனா நீங்க பொன்னியின் செல்வனோட ஒவ்வொரு Frame-ஐயும் உத்து பாத்தா Painting மாறியே இருக்கும். அதுக்கு ரவி வர்மனுக்கு பாராட்டுக்கள்.

இன்னும் 50 வருஷம் கழிச்சு பாத்தாலும் இந்த படம் புதுமையாக இருக்கும். பொன்னியின் செல்வன் போன வருஷம் வெளியாகி ரெண்டு முக்கியமான சம்பவம் பண்ணுச்சு. ஒன்னு மணிரத்னம்க்கு வயசாகிடுச்சு, அவரால மறுபடியும் வெற்றி படங்கள் குடுக்க முடியாதுனு சொன்னவங்களுக்கு… நான் எப்பயும் Form Out ஆக மாட்டேன்னு சொல்லி திருப்பி அடிச்சாரு மணிரத்னம்.

30 வருஷமா திரையரங்குகளுக்கு போகாத பெரியவங்க எல்லாரும் கூட்டம் கூட்டமா வந்து படத்த பாத்தாங்க. உண்மையான குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி இது தான். பொன்னியின் செல்வன் தமிழ்நாட்டுல மட்டும் 215 கோடி வசூல் பண்ணிருக்கு. எல்லா தமிழ் படங்களுக்கும் இது ஒரு பெரிய கனவு தான்! பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய மகுடமா அமைஞ்சுருக்கு!

இப்போ வெற்றிமாறன் சொன்னது தான் ஞாபகம் வருது “இப்போ இருக்க பெரிய இயக்குனர்கள் எல்லாம் மணி Sir-அ பாத்து படம் எடுக்க வந்தாங்க, நாளைக்கு வர போற இயக்குனர்கள் பொன்னியின் செல்வன் பார்த்து Influence ஆகி திரைப்படங்கள் உருவாக்குவாங்க. இது கண்டிப்பா நடக்கும்”

Thank you Mani Sir for existing ❤️

Article By RJ Vishal