Cinema News Stories

உலகளவில் வசூல் வேட்டை செய்யும் லியோ!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த 19 ஆம் தேதி வெளியானது. லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணி என்பதால் தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுது மட்டுமில்லாமல் வசூலிலும் தொடர் சாதனைகளை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த உலகளாவிய ஊடக அளவீடு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான காம்ஸ் ஸ்கோர் வெளியிட்டுள்ள தகவலின் படி, வார இறுதி நாட்களில் உலகளவில் லியோ $31 மில்லியன் (250 கோடி) வசூலித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உலகளவில் கடந்த வாரம் வெளியான திரைப்படங்களில் மூன்றாவது அதிக வசூல் செய்த படமாக லியோ உள்ளது .

ஞாயிற்றுகிழமை நிலவரப்படி மொத்தமாக லியோ 48.5 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இது பிரபல ஹாலிவுட் நடிகர் லியனோ டிகாப்ரியோ நடிப்பில் வெளியான Killers of the Flower Moon திரைப்படத்தின் வசூலை விட அதிகம். Killers of the Flower Moon, லியோ வெளியாகி அடுத்த நாள் வெளியானது, அதே சமயத்தில் Killers of the Flower Moon இந்தியாவில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், ஒரு இந்திய திரைப்படம் வசூல் ரீதியில் ஒட்டு மொத்த உலக சினிமா அரங்கையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.

Article By Sathishkumar Manogaran