Cinema News Specials Stories

4 Years of ‘Kaithi’

பொதுவா ஒரு தமிழ் திரைப்படம் பார்க்கப் போறோம்-னு சொன்னா, கண்டிப்பா அந்த படத்துல 5-6 பாடல்கள் இருக்கும், அப்போ அப்போ நம்மளை சிரிக்க வைக்க சில நகைச்சுவைகள் இருக்கும், அழகான கதாநாயகி இருப்பாங்கனு நமக்குள்ள பல கற்பனைகள் இருக்கும்.

காலம் காலமா தமிழ் சினிமாவின் வாடிக்கையா இது தான் இருந்துச்சு. ஆனா, யார் கிட்டயாச்சும் ஒரு படம் பார்க்க போறோம்… அந்த படத்துல பாடல்கள் இல்லை, நகைச்சுவை இல்லை, கதாநாயகி இல்லை, படம் முழுக்க ஒரு நாள் இரவுல நடக்குற நிகழ்வுகளை வைத்து தான் இருக்குனு சொன்னா; என்னப்பா ஹாலிவுட் படமா? பெயர் என்ன-னு கேட்போம்?

அப்படி கோலிவுட் சினிமாவே பார்த்து வியந்து, எல்லா மாதிரியான வரையறைகளையும் உடைத்து எரிந்த படம் தான் கைதி. பெயருக்கு ஏற்ற மாதிரி நம்மள கதை, திரைக்கதை மூலமா கைது செய்த ஒரு படம். நடிகர் கார்த்தி அவர்களோட நடிப்புல, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களோட இயக்கத்துல பெரிய எதிர்பார்ப்பு இல்லாம திரைக்கு வந்து அதற்கு அப்புறம் தியேட்டரே நிரம்பி வழியுற அளவுக்கு மக்கள் கூட்டம் கூட்டமா வந்து பார்த்து ரசிச்ச படம்.

சாதாரண திரைப்படமா ஆரம்பிச்சு… அதை தொடர்ந்து ஒரு படம், அதற்கு சமகாலத்துல நடக்குற மாதிரி இன்னொரு படம்-னு இப்படி மொத்த சினிமா ரசிகர்களையும் ஆச்சர்யத்தால கைது செய்த படம் தான் கைதி. இந்த படம் வெளியாகி 4 வருடங்கள் நிறைவடைந்தாலும் இப்போ பார்த்தால் கூட சுவாரசியம் குறையாத படம். இன்னமும் எத்தனை நாட்கள் ஆனாலும் அந்த பிரியாணி சீன்-ஐ பார்த்ததும் நம்மளையும் சாப்பிட ஏங்க வைக்குற ஒரு படம். மொத்தத்துல இது படம் இல்லை, கோலிவுட் சினிமாவுக்கு ஒரு வித்தியாசப் பாடம்.

Lokesh-Kanagaraj

இந்த படத்துக்கு இன்னொரு சிறப்பு இருக்கு. LCU-ல முதல் படம் இது. இந்த படத்துக்கு பிறகு தான் விஜய இயக்கி மாஸ்டர் படம் மூலமா தமிழ் சினிமாவோட முன்னணி இயக்குநர்கள்ல ஒருத்தரா ஆனாரு லோகேஷ் கனகராஜ். LCU-ல 2வது படம் தான் விக்ரம். இப்போ LCU-ல 3-வது படம் லியோ ரிலீஸ் ஆகிருச்சு.

அடுத்து லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிய இயக்குறாரு. அது LCU-ஆ அப்படிங்குறது இனி தான் தெரியும். அதுக்கு அடுத்தது நிச்சயமா கைதி 2 தான் அப்படின்னும் சொல்லிட்டாரு. கைதி 2 க்காக லோகேஷ் கனகராஜ், கார்த்தி மட்டும் இல்ல LCU Fans எல்லாருமே ரொம்ப ஆர்வமா காத்திருக்காங்க.

Lokesh-Kanagaraj

ஏற்கனவே கைதில இருந்த போலீஸ் லியோ படத்துல வந்தப்போ தியேட்டர்ல அவ்ளோ Response இருந்துச்சு… எல்லாரும் விசிலடிச்சு கொண்டாடுனாங்க. அதுக்குள்ள கைதி திரைப்படம் வெளியாகி 4 வருசம் ஓடிடுச்சு. #4YearsofKaithi… அப்டியே திரும்பி பாக்குறப்ப நமக்கு ஒரு நல்ல Nostalgia வா இருக்கு. சீக்கிரமே கைதி 2 வெளிவரனும். அதுல LCU-ல இருக்க எல்லா படத்துல இருந்தும் Connected Scenes வரனும். கைதிய விட கைதி 2 ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கனும்.

Article by RJ Karthick