Cinema News Stories

சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள ‘Lust Stories 2’

ஓடிடியில் 2018ஆம் ஆண்டு வெளியாகி ஏற்கனவே ஹிட் அடித்த பாலிவுட் Anthology Lust Stories.

இதன் இரண்டாம் பாகமான Lust Stories 2 ட்ரெய்லர் தற்போது வெளியாகி சமூகவலைதளங்களில் பெரும் வைரலாகியுள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான வெளிப்படையாக பேச முடியாத உறவுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து முதல் பாகத்தில் பேசியிருப்பார்கள். அதே போல தான் இரண்டாம் பாகமும் உருவாகியிருக்கிறது.

Lust Stories முதல் பாகத்தில் முன்னணி நடிகைகள், இயக்குநர்கள் இருந்தது போல இரண்டாம் பாகத்திலும் முன்னணி நடிகைகள் தமன்னா, கஜோல், மிருணல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இயக்குநர்கள் பட்டியலில் பால்கி இடம்பெற்றுள்ளார்.

எனவே இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அதை ஈடுசெய்யும் விதமாக ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும் அமைந்துள்ளன.

Lust Stories 2 ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துகளை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.