Cinema News Stories

OTT-யில் ‘Avatar: The Way Of Water’

கடந்த வருடம் இறுதியில் வெளியான அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ‘Avatar: The Way Of Water’ தற்போது ஓடிடி யில் வெளியாகியுள்ளது.

அவதார் முதல்பாகம் 2009 ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் கவர்ந்து, உலகளவில் அதிக வசூல் செய்த படமாக இன்று வரை உள்ளது.

இந்நிலையில் பல வருட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. முதல் பாகம் ஏற்படுத்திச் சென்ற தாக்கம் 10 ஆண்டுகளுக்கும் மேல் குறையாமல் இருந்ததால் இரண்டாம் பாகத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

எனவே மிக அதிகமான எதிர்பார்ப்புகளுக்கிடையே படம் வெளியானது. Avatar: The Way Of Water படம் பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருந்தாலும் படத்தின் கதையில் சுவாரஸ்யம் பெரிதாக இல்லாததால் முதல் பாகத்தின் வசூலை இப்படத்தால் ஈட்ட முடியவில்லை.

உலகளவில் அதிக வசூல் சாதனை செய்த படங்களின் பட்டியலில் ’அவதார் 2’ படம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் Avengers: Endgame திரைப்படம் உள்ளது.

இந்நிலையில் இன்று Avatar: The Way Of Water திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. எத்தனை முறை பார்த்தாலும் ஆச்சரியமூட்டும் ’அவதார் 2’ படத்தின் காட்சிகளை Home Theatre-ல் ரசிகர்கள் பலரும் ரசித்து பார்த்து வருகின்றனர்.

Article By MaNo