Cinema News Stories

100 மில்லியனை கடந்த மாங்கல்யம் !!!

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் திரைப்படத்தின் மாங்கல்யம் பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை புரிந்துள்ளது. சிம்பு நடித்த படங்களில் இருந்து வெளிவந்த பாடல்களில் 100 மில்லியன் பார்வைகளை கடந்த முதல் பாடல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால், நந்திதா, பாரதிராஜா, பால சரவணன் ஆகியோர் நடித்த திரைப்படம் ஈஸ்வரன். இப்படத்திற்கு பிரபல இசை அமைப்பாளர் தமன் அவர்கள் இசையமைத்துள்ளார். சிம்பு – தமன் கூட்டணியில் இதற்கு முன் வெளிவந்த திரைப்படங்களின் பாடல்கள் எப்படி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோ, அதே போல ஈஸ்வரன் திரைப்படத்தின் பாடல்களும் மக்கள் கொண்டாடும் மெகாஹிட் பாடல்களாகவே அமைந்தது. 

குறிப்பாக மாங்கல்யம் பாடல் பலரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ல் தினசரி வலம் வரும் பாடலாக இருந்து வருகிறது. இந்நிலையில் இப்பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது சிம்பு ரசிகர்களுக்கும், இசைப் பிரியர்களுக்கும் உற்சாகம் அளித்துள்ளது. 

இப்பாடலை படத்தின் நாயகனான சிம்புவுடன் இணைந்து ரோஷினி பாடியுள்ளார். ஏற்கனவே இப்பாடலின் லிரிக் வீடியோ வெளிவந்து ஏழு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இப்பாடலின் வெற்றியை சிம்பு ரசிகர்கள் ஆரவாரத்துடன் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். ஈஸ்வரன் திரைப்படத்தின் இசை அமைப்பாளரான தமனுக்கும், இப்படத்தின் படக்குழுவினருக்கும் சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

About the author

shafin

உங்களில் ஒருவன்