Specials Stories

என்றும் அன்புடன் கே. எஸ். ரவிக்குமார் !!

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் திரைத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருந்தாலும், நடிப்பில் ஒரு சிறப்பான முத்திரையைப் பதித்தவர். முக்கியமான கதாபாத்திரம், துணை வில்லன் இப்படி நடிப்பில் தனித்தனி கதாபாத்திரங்கள் மூலம் தன்னை ரசிகர்களுக்கு அடையாளப்படுத்திக் கொண்டவர்.

1958 மே மாதம் 30 ம் தேதி பிறந்தவர் இவர். மனைவி மூன்று குழந்தைகளுடன் சிறப்பான வாழ்க்கை பயணம்.1988 இல் கதாநாயகன் மோகனுடன் நண்பனாக மக்கள் பார்வைக்கு திரையில் வந்தவர். தலைமை காவலர் ,காவல் ஆய்வாளர், துணை கமிஷனர், டாக்ஸி வாகன ஓட்டுனர், தொழிலாளர் சங்கத் தலைவர் ,எம். எல் .ஏ இப்படி 20க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் திரையில் தோன்றினாலும், அவர் இயக்கிய படங்களில் சிறப்பு தோற்றதில் திரையில் தோன்றி மக்களை ஆச்சரியப்படவும் ,ஆனந்த படவும் வைத்தவர்.

இயக்குனர் கே. எஸ் ரவிக்குமார் இயக்கிய படங்கள் தயாரிப்பாளர்களுக்கு வணிகரீதியாக வெற்றியைத் தேடித் தந்தவை என்றே சொல்லலாம். அவர் வெற்றிக்கு சான்றாக சேரன் பாண்டியன் ,நாட்டாமை, முத்து, நட்புக்காக, அவ்வை சண்முகி என்று பல படங்களை எடுத்துக் காட்டியவர்.

தன் படக்கதை நாயகனை தன் கற்பனையில் உள்ளவாறு தன் ரசிகர்களுக்கு படம்பிடித்துக் காட்டியவர் இயக்குனர் கே. எஸ் .ரவிக்குமார். தமிழ் திரைப்படங்களை உலகத் தரத்திற்கு கொண்டு செல்ல முயன்றதில் இயக்குனர் கே .எஸ் ரவிக்குமாருக்கு ஒரு பங்கு உண்டு என்று சொன்னால் அது மிகையில்லை.

கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட சுயம்வரம் திரைப்படத்தின் இயக்குனர்களில் கே.எஸ் ரவிக்குமாரும் ஒருவர்.  நாட்டாமை, நட்புக்காக, படையப்பா, தசாவதாரம் போன்ற படங்களுக்காக சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில விருதையும், சிறந்த திரைப்படத்திற்காக ஃபிலிம்ஃபேர் விருதை நட்புக்காக படத்திற்காகவும் , இயக்குனருக்கான தமிழக அரசு திரைப்பட விருதை நாட்டாமை படத்திற்காகவும் பெற்ற பெருமைக்குரியவர்.

தசாவதாரம் பத்மஸ்ரீ கமலஹாசனின் பத்து முகங்களை பலரும் ஆச்சரியப்படும் வகையில் படம்பிடித்துக் காட்டியவர் கே.எஸ் ரவிக்குமார். 2000 ஆண்டு வெளிவந்த உலகநாயகன் கமலஹாசன் நடித்த தெனாலி திரைப்படம் கே. எஸ். ரவிக்குமார் தயாரித்து இயக்கி வெற்றி கண்ட படம். கே.எஸ் ரவிக்குமாரின் கதை, திரைக் கதை ,வசனத்துடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 2014இல் வெளிவந்த படம் கோச்சடையான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், மக்கள் கலைஞர் விஜயகாந்த், தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித் என்று பல கதாநாயகர்களுடன் தன்னுடைய இயக்கத்தில் வெற்றி கண்டவர்.

பல மொழிகளில் வெற்றி படங்களை கொடுத்து இருந்தாலும் தமிழ் திரையுலகில் ரசிகர்களின் இதயங்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து மக்கள் மனதில் ஒரு அடையாளமாக வலம் வருபவர் கே.எஸ் ரவிக்குமார் என்பது நிதர்சனம்.