Cinema News Stories Teaser/Trailer

பாரிஸ் ஜெயராஜ் Trailer இதோ !!!

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தின் ட்ரைலர் Youtube-ல் வெளியாகியுள்ளது. A1 திரைப்படத்தின் ஜான்சன்- சந்தானம் வெற்றிக்கூட்டணி இணையும் இரண்டாவது திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம் நடித்த A1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணனே பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் ” காவா உள்ள ” பாடல் வெளிவந்து ரசிகர்கள் கொண்டாடும் கானா பாடலாக வலம் வருகிறது.

இப்படத்தில் சந்தானத்துடன் இனைந்து அனிகா சோடி, மொட்டை ராஜேந்திரன், மருதி ப்ரித்திவிராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ட்ரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் சந்தானம் ரசிகர்களால் பெரிதளவில் பகிரப்பட்டு வருகிறது.

இப்படத்தின் டிரைலரை வைத்து பார்க்கும் போது, காதல் தோல்வி ஏற்பட்ட கதாநாயகன் தன் மற்றொரு காதலில் வெற்றி பெருகிறாரா ??,.. என்பதை மையப்படுத்தியே இப்படம் அமைந்திருக்கும் என தெரிகிறது. வழக்கம் போல் சந்தானத்தின் Counter-கள் நிறைந்த காமெடி Entertainer-ஆக இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தின் டிரைலரை கீழே காணுங்கள் .