Cinema News Stories Teaser/Trailer

துக்ளக் தர்பார் டீஸர் இதோ !!!

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே 4 லட்சம் பார்வைகளை இந்த டீஸர் Youtube-ல் பெற்றுள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர்-ஐ வைத்து பார்க்கும்போது இப்படம் அரசியல் கலந்த ஆக்ஷன் திரைப்படமாக அமைந்திருப்பது போல தெரிகிறது.

விஜய் சேதுபதியின் ‘ 96 ‘ திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா தான் துக்ளக் தர்பார் திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் ” அண்ணாத்தே சேதி ” பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் சேதுபதி – பார்த்திபன் Combo-வில் வெளிவந்த ‘நானும் ரௌடி தான்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அந்த வகையில் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் மீதும் ரசிகர்களில் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

துக்ளக் தர்பார் திரைப்படத்தின் டீஸர்-ஐ கீழே காணுங்கள்.