Cinema News Stories Teaser/Trailer Trending

காக்குறதுக்காக களம் இறங்கும் ஈஸ்வரன் !!!

பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் சிலம்பரசனின் ஈஸ்வரன் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ச்சியான Update-களை கொடுத்து அசத்தி வரும் சிம்புவை சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் போற்றி கொண்டாடி வருகின்றனர்.

ஏற்கனவே வெளிவந்த இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ட்ரைலரும் பல ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. சிம்பு, பாரதி ராஜா, நிதி அகர்வால், நந்திதா, பால சரவணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியாகியுள்ள ட்ரைலரில் ” நான் காக்குறதுக்காக வந்திருக்கும் ஈஸ்வரன் டா .. ” என்ற வசனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வசனத்தை குறிப்பிட்டு, பலரும் இந்த ட்ரைலர்-ன் Youtube Link-ஐ சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இப்படத்தின் டீஸர், ட்ரைலர், பாடல்கள், படப்பிடிப்புத் தள புகைப்படங்கள் என அனைத்துமே ஈஸ்வரன் மீது உள்ள எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டே இருக்கிறது. சிம்புவை நீண்ட நாள் கழித்து திரையில் காண, அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோலிவுட் சினிமா ரசிகர்களுமே காத்திருக்கின்றனர்.

இப்படம் பொங்கல் பண்டிகையை நினைவில் கொண்டு குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட படம் என்பதை சிம்பு சமீபத்தில் கூறியிருந்தார். சிம்புவின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்து, ஈஸ்வரன் ஒரு சூப்பர்ஹிட் படமாக அமைய வேண்டும் என சூரியன் FM சார்பில் வாழ்த்துகிறோம்.

ஈஸ்வரன் திரைப்படத்தின் ட்ரைலர்-ஐ கீழே காணுங்கள்.