Cinema News Stories Trending

வாத்தி படைத்த வரலாறு !!!

Youtube Record-களை புதிதாக உருவாக்குவதும், அதை தாங்களே முறியடிப்பதும் தளபதி விஜய் ரசிகர்களுக்கு வழக்கமான பழக்கமாகவே ஆகிவிட்டது. தற்போது பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலின் லிரிக் வீடியோ 10 கோடி பார்வைகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

இந்த சாதனையை தளபதி விஜயின் பாடல் நான்காவது முறை நிகழ்த்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், தெறி படத்தின் ‘என் ஜீவன்’, மெர்சல் படத்தின் ‘ஆளப்போறான் தமிழன்’, பிகில்-ன் ‘வெறித்தனம்’ ஆகிய பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளை கடந்த தளபதி பாடல்களாக இருந்தது.

பொங்கலுக்கு மாஸ்டர் ரிலீஸ் என்ற செய்தியை கேட்டதிலிருந்து, திரை மீது விழி வைத்து காத்திருக்கும் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதத்தில் ” வாத்தி கம்மிங் ” பாடலின் இந்த Youtube சாதனை அமைந்துள்ளது. தளபதி விஜயின் ரசிகர்கள் இந்த சாதனையை சமூக வலைதங்களில் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ராக்ஸ்டார் அனிருத்-ன் இசையில் தியேட்டர்கள் தெறிக்கப் போகிறது என்றே சொல்லலாம். இப்படத்தின் Update-களும், இது போன்ற Youtube சாதனைகளும் மாஸ்டர் திரைப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை மேலும் ஒரு படி ஏற்றி வைத்துள்ளது.

வாத்தி கம்மிங் லிரிக் வீடியோவில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்தது மட்டுமின்றி, தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் ‘வாத்தி கம்மிங்’ Dance Step-ஐயும் ஆடியிருப்பார். ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் துள்ளாட்டம் போட வைத்த பாடலாகவே வாத்தி கம்மிங் பாடல் இருக்கிறது என்று சொன்னால், அது மிகையாகாது.

வாத்தி கம்மிங் பாடலின் Lyric வீடியோவை கீழே காணுங்கள்.

About the author

shafin

உங்களில் ஒருவன்

Suryan FM Twitter Feed

Suryan Podcast