Specials Stories

கிளாசிக் ‘கே.எல்.ராகுல்’

இந்த மாடனான உலகத்துல எத்தனையோ விஷயங்கள் புதுசு புதுசா வந்திருந்தாலும் கிளாசிக் என்னைக்குமே கிளாசிக் தான். இது எல்லாத்துக்கும் பொருந்தும். அதுல கிரிக்கெட்டும் ஒன்னு. எஸ் 360 டிகிரில எப்படி வேணாலும் வரக்கூடிய பந்த சுத்தி சுத்தி அடிச்சாலும் கிரிக்கெட்டுக்கே உண்டான அந்த டெக்ஸ்ட் புக் ஷாட் அப்டினா அது ஒரு சில பேர் தான்.

அந்த ஒரு சிலர்ல கிளாசிக் கே.எல்.ராகுல். முக்கியமான முதன்மையான இடத்துல இருப்பாரு. கர்நாடகால பிறந்த இவரு சின்ன வயசுல இருந்து கிரிக்கெட் மேலே கொண்ட காதல் காரணமா அது மேல அதிக கவனம் செலுத்துனாரு. அதுக்கப்புறம் அப்டியே கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து உலகத்துலேயே ரொம்ப பிரபலமான டி20 டோர்னமெண்டல விளையாட ஆரம்பிச்சாரு.

முதல்ல வாய்ப்பு கிடைக்காம பெங்களூர் அணியின் Bench-ல் உட்கார்ந்து இருந்த இவரு, ஒருமுறை வாய்ப்பு கிடைச்சு தன்னுடைய திறமைய நிரூபிச்சு காட்டினார். அதுக்கப்புறம் தொடர்ந்து பெங்களூர்ல தான் நீடிச்சாரு. அதுக்கு அடுத்து இவருடைய திறமைய பார்த்து ஏலத்துல ஒவ்வொரு டீமும் இவர எடுத்தாங்க.

ஹைதராபாத்ல விளையாண்டார், அப்புறம் பஞ்சாப் போனாரு, பஞ்சாப் டீம்ல கேப்டனா இருந்தாரு, அதுக்கு அடுத்து இப்போ லக்னோ டீமோட கேப்டனா இருக்காரு, பேட்டிங் மட்டும் இல்ல கீப்பிங்லயும் இவருடைய ஸ்டைல் கிளாசிக் தான்.

இனிவர கிரிக்கெட் போட்டிகள் எல்லாத்துலயும் இவருடைய கிளாசிக் ஷாட்ஸ் மூலம் அதிக ரன் அடிச்சு அவருக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்ப்பார்னு எதிர்பார்த்துட்டு இருக்க பல கோடி ரசிகர்களோட ஆசையை கண்டிப்பா நிறைவேற்றுவார்.

Article By RJ Kavin